சரவாக் அரசு தமக்குத் தடை விதித்து அம்மாநிலத்துக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள மற்ற எதிரணி எம்பிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் கேட்டுக்கொண்டுள்ளார்.
மே 7 மாநிலத் தேர்தல் தொடர்பில் சரவாக் செல்லும் எதிரணி எம்பிகள் தடுத்து நிறுத்தப்படும் வேளையில் பினாங்கு முதலமைச்சரை சரவாக் குடிநுழைவுத் துறை தடுத்து நிறுத்தவில்லை.
சரவாக் சென்ற லிம் கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் பேசியபோது குடிநுழைவுத் துறையின் அதிகாரம் எதிரணிக்குச் “சாதகமாக இல்லை” என்றார். 82 இடங்களுக்காக நடைபெறும் தேர்தலில் டிஏபி 29 இடங்களில் போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார்.
சரவாக் சட்டமன்றம் ஏப்ரல் 11-இல் கலைக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 25-இல்.
டி.எ.பி.யில் உள்ள மற்ற எம்.பி. க்கள், தலைவர்கள் பெரும்பாலோர் சுத்தமானவர்கள். அவர்களது சரவாக் பிரச்சாரம் ஓரளவிற்கு டி.எ.பி.க்கு வாக்குகளை சேகரித்துக் கொடுக்கும். ஆகவே, அவர்களை சரவாக்கினுள் நுழைய விடுவதாய் இல்லை. தற்போதைய சூழ்நிலையில் நீ மட்டும் உள்ளே போனால், டி.எ.பி.க்கு அங்கே ‘ஏழரை’ தான் மவனே. அதனால்தான் உன்னை மட்டும் உள்ளே விட்டது, சரவாக்கின் பாரிசான் ஆட்சி. ஒழுங்கா, அடுத்த flight புடிச்சி பினாங்கு திரும்பி விடு. சரவாக் டி.எ.பி.யை குப்பையில் தள்ளிடாதே!