நஜிப்-எதிர்ப்புக் குழு: புதிய பிரதமரை மக்களே ஜனநாயக முறைப்படி தீர்மானிக்கட்டும்

anti naபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான  குடிமக்கள்  பிரகடனத்துக்குப்  பின்னணியில்  உள்ள  குழு,  நஜிப்  பதவி  விலகினால்  அவரை  அடுத்து  யார்  பிரதமர் ஆவது  என்பதை  ஜனநாயக  முறைப்படிதான்  தீர்மானிக்க  வேண்டும்  என்று  கூறியது.

முன்னாள்  அமைச்சரும்  மலேசியாவைப்  பாதுகாப்போம்  இயக்கத்தின்  நிறுவனருமான  சைட்  இப்ராகிம்  நஜிப்பை  அடுத்து  துணைப்  பிரதமர்  அஹமட்  ஜாஹிட்  ஹமிடிதான்  பிரதமராக  வேண்டும்  என்று  மொழிந்திருப்பதை  அடுத்து  அவ்வியக்கத்தின்  செயலகம்  ஓர்  அறிக்கையில்  இவ்வாறு  கூறியது.

“நஜிப்  வெளியேற்றப்பட்டால்  அடுத்து  வரப்போவது  யார்  என்று  அடிக்கடிக்  கேட்கப்படுகிறது.

“இந்த  விசயத்தில்  செயலகம்  தெளிவான  நிலைப்பாட்டைக்  கொண்டிருக்கிறது.  ஜனநாயக  வழக்கப்படி   மக்களவையில்  பெரும்பான்மை  ஆதரவு  யாருக்கோ  அவரே  நஜிப்புக்குப்  பின்  பதவி  ஏற்க  வேண்டும்”, என்று  அவ்வறிக்கை  கூறிற்று.

அவர்  ஊழலை  ஒடுக்கி,  அரசுத்துறைகளின்  சுதந்திரத்தையும்  சட்ட  ஆளுமையையும்  நிலைநிறுத்தி,  மக்கள்  நலனுக்கு  முன்னுரிமை  கொடுக்க  வேண்டும்.

“இந்த  நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால்  குடிமக்கள்  பிரகடன  இயக்கம்  மீண்டும்  எழுச்சி  காணும்”, என்று  அறிக்கை  குறிப்பிட்டது.