சவூதி வெளியுறவு அமைச்சரை மகாதிர் நம்பத் தயாராக இல்லை

foreignசவூதி  வெளியுறவு  அமைச்சர் அதெல்  அல்-ஜூபிர்),  அந்நாட்டிலிருந்துதான்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  அரசியல்  நன்கொடை  வந்ததாகவும்    மலேசிய  சட்டத்துறைத்  தலைவரின்  விசாரணையில்  முழுத்  திருப்தி  கொள்வதாகவும்  கூறி  இருப்பதை  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  நம்பத்  தயாராக  இல்லை.

“அவர்  அப்படித்தான்  சொல்கிறார். ஆனால்,  ஆதாரங்கள்  தேவை. பணம்  மாற்றிவிடப்பட்டிருந்தால்  ஏதாவது  எழுத்தில்  இருக்கும்-  காசோலைகள்,  வங்கி  ஆவணங்கள், பணம்  அனுப்புவதற்குப்  பயன்பட்ட  வங்கி.

“வெறும்  அறிக்கை  மட்டும்  போதாது. எனவே,  ஆவணங்களைப்  பார்க்கும்வரை  அவை   வெளியிடப்படும்வரை  எந்தவொரு  அறிக்கையையும்  நம்புவதற்கில்லை”.

மலேசியாகினிக்கு  அளித்த  நேர்காணலில்  முன்னாள்  பிரதமர்  இவ்வாறு  கூறினார்.