தேச நிந்தனைச் சட்டத்தை அகற்றுவீர்: சுஹாகாம் மீண்டும் கோரிக்கை

sukமலேசிய  மனித  உரிமை  ஆணையம்(சுஹாகாம்)  1948 தேசநிந்தனைச்  சட்டத்தை  அகற்ற  வேண்டும்  என்று  மீண்டும்  வலியுறுத்தியது.

சுஹாகாமின்  2015  ஆண்டறிக்கையை  வெளியிட்டபோது  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி  ஆகம்  இந்தக்  கோரிக்கையை  முன்வைத்தார்.

தேச  நிந்தனைச்  சட்டத்துக்கு  கடந்த  ஆண்டு  ஏப்ரலில்  சில  திருத்தங்கள்  செய்யப்பட்டன.

“ஆனாலும்,  கூட்டரசு  அரசமைப்பு  பகுதி  10  உத்தரவாதம்  அளிக்கும்  பேச்சுரிமைக்கு  உண்மையான  பொருளைக்  கொடுப்பதற்காக  தேச  நிந்தனைச்  சட்டம்  அகற்றப்பட  வேண்டும்  என்ற  அதன்  நிலைப்பாட்டை  ஆணையம் மீண்டும்  வலியுறுத்துகிறது”, என்றாரவர்.