கடந்த வார இறுதியில் சீரியாவில் ஒரு மலேசிய தீவிரவாதி கொல்லப்பட்டான். இதையும் சேர்த்து கடந்த ஈராண்டுகளில் சீரியாவிலும் ஈராக்கிலும் நடந்த சண்டைகளில் மொத்தம் 19 மலேசியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் எனப் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏப்ரல் 17-இல் அப்துல் கனி யாக்கூப்,31, அல்-கயிர் மாநிலத்தில் ஒரு சண்டையில் கொல்லப்பட்டதாக போலீஸ் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இயக்குனர் ஆயுப் கான் மைடின் பிச்சை கூறினார்.
அப்துல் கனி கடந்த டிசம்பரில் ஐஎஸ் தீவிரவாதிகள் இயக்கத்தில் சேர்ந்தார் என ஆயுப் கான் சொன்னார்.
இவர்களை கொரில்லா தீவிரவாதிகள் அல்லது பயன்கரவ்வாதிகள் என சொல்வதை விடுத்து, போராளிகள் என்கிறீர்களே!
அதுதானே. தீவிரவாதிகளை தீவிரவாதி என்று எழுதுவதே முறை.