பினாங்கு மாநிலத்தில் சினிமா கொட்டகைகளில் பீர் விற்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று பினாங்கு இந்து சங்கம் அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறது.
அதன் துணைத் தலைவர் பி.முருகையா, அங்கு பீர் விற்கப்படுவது சிறார்கள் உள்பட சினிமா பார்க்கச் செல்வோரை பீர் குடிக்க ஊக்குவிக்கிறது என்றார்.
“சினிமாக்களில் பீர் விற்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அரச சுங்கத் துறை, சுகாதார அமைச்சு, பினாங்கு தீவு மாநகர் மன்றம் ஆகியவற்றிடம் அதிகாரப்பூர்வமாக முறையீடு செய்திருக்கிறோம்”, என முருகையா தெரிவித்தார்.
ஒரே வழி அம்மாதியான சினிமா அரங்கம் இருக்குமாயின் அங்கே செல்வதை தவீர்ப்போம், மக்கள் செல்லாத சினிமா அரங்கம் தாமாக மூடப்படும்.
அடடா என்ன ஒரு போற்றுதலுக்குரிய பொறுப்புணர்ச்சி நமது பினாங்கு இந்து சங்கத்திற்கு !! பட்டர்வெர்த்தில் உள்ள ஒரு பெரிய அம்மன் ஆலய மண்டபத்தில், வேற்று மத்தினரால், தமிழகத்திலிருந்து மதபோதகர் தருவிக்கப்பட்டு “குணமாக்குதல் வழிபாடு” சில வாரங்கள் நடைபெற்றதும் அதற்கு, வீடு வீடாக அச்சடிக்கப்பட்ட அறிக்கைகள் விநியோகிக்கப்பட்டதும், பரவலாக நடந்ததே, என்ன நடவடிக்கை எடுத்தார்கள், பேச்சு மூச்சே காணோம் இவர்களுக்குத் அப்படி நடந்ததே தெரியாதா ? அப்போ எங்கே போனார் அண்ணாச்சி ? முதலில் ஆலயங்களின் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துங்கள் ஐயா, உங்கள் சேவை அங்கே அதிகம் தேவை.
ஐயா T.SVALINGAM! என்னய்யா சொல்கிறீர்? பீர் உள்ள சினிமா அரங்கத்திற்கு செல்வதை தவிர்கவா? இது நடக்கிற காரியமா? பீர் இல்லாத சினிமா அரங்கம்தான் மூடப்படுமே ஒழிய, பீர் விற்கும் அரங்கிற்கு மட்டுமே படையெடுக்கும், இந்த குடிகார தமிழர் கூட்டம். அது சரி, இது என்ன அரசாங்கத்திற்கு எதிராக இந்த பினாங்கு ஹிந்து சங்கம் செயல்படுகிறது. தமிழர்களை குடிபோதையில் கொன்று குவிக்க இந்த அரசாங்கம் படாத பாடு படுகிறது. இதற்கு எதிராக சங்கம் செயல்படுவதா? தேசத் துரோகம். இந்த வருடம் ஆளுநர் பிறந்தநாளின்போது பி. முருகையாவிற்கு பட்டம் கிடையாது.
கண்ணுக்கு முன் இருக்கும் யானை தெரியவில்லை. தொலைவில் இருக்கும் எறும்பு பூதகரமாகத் தெரிகின்றது பினாங்கு இந்து சங்கத்திற்கு! ஏன் பிறை முனீஸ்வரர் ஆலயத்தில் நடத்தப் படும் உயிர் கொலை கண்ணுக்குத் தெரியவில்லையா? அதை கேட்க தைரியம் இல்லையா? நல்லா விளங்கிடும் இந்து மதம்.
SARIIYAAGA SONNIIR
மலேசியா இந்து சங்கம் அவர்களால் என்னதான் செய்ய முடியும்!பத்திரிகைகளிலும் தகவல் சாதனங்களிலும் அறிக்கை விடத்தான் முடியும் ஓர் சங்கத்துக்கு தலைமை பொறுப்பை ஏற்றுகொண்டால் மனதைரியதுடன் பொறுப்புடனும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை களைந்து சேவை செய்ய நேர்மையுடன் தில் வேண்டும் இல்லையேல் குறிப்பிட்ட தலைமையில் இருந்து விலகி மற்றவர்களுக்கு வழிவிடவேண்டும் பட்டம் பதவி அரசாங்க மான்யங்களை பெற்று கொண்டு சுகபோக வாழ்கையை மறந்து இந்துகளுக்கு சேவை செய்ய முற்படுங்கள் அரசியல் கட்சிபோல் செயல்படாதீர்கள்.
திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது.தமிழன் மதுவைக் குடிப்பதை நிறுத்தினால்தான் தமிழனின் மானம் காக்கப்படும்.குடிகாரன் மதுவை குடிப்பதை நிறுத்துவானா?
கடந்த 12.5.1985ல் மலேசிய இந்து சங்க பிரச்சார பிரிவின் தலைவராக பொறுப்பு வகித்த முனைவர் ஆறு நாகப்பன் மதமாற்றத்திற்கு எதிராக பல ஆண்டுகள் போர் தொடுத்து வந்தார். பல உட்பூசல் காரணமாக சங்கத்தை விட்டு வெளியேறினார். அடியேனும் அவருடன் இணந்து மதமாற்றத்திற்கு எதிராக போராடியவன். தற்பொழுது மலேசிய சைவ சமய பேரவை என்னும் இயக்கத்தை அமைத்து மக்களுக்கு சமய அறிவை வழங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால் அரசாங்கம் வழங்கும் மானியங்கள் நிறுத்தப்படுமே என்ற அச்சத்தில் பத்திக்கையில் அறிக்கை விடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள் இந்த பிழைக்கத் தெரிந்தவர்கள்.