சரவாக் பிகேஆரும் டிஏபியும் மாநிலத் தேர்தலில் ஆறு தொகுதிகளில் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடும் நிலையைத் தவிர்க்க பேச்சுகள் நடத்துவதற்குக் காலம் கடந்துவிடவில்லை என்கிறார் சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம்.
அவை போட்டியிடும் தொகுதிகளில் பக்கத்தான் ஹராபான் வெற்றியை உறுதிப்படுத்த இரண்டு கட்சிகளும் இவ்விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.
“(சரவாக் தேர்தலில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்கு) வருந்துகிறேன்.
“இப்போதைக்கு பக்கத்தான் ஹராபான் வெற்றிக்காக அவை பாடுபட வேண்டும்”, என ஒரு வழக்கின் பொருட்டு இன்று நீதிமன்றத்துக்கு வந்தபோது அன்வார் குறிப்பிட்டார்.
“இரண்டும் இப்போதும்கூட பேசித் தீர்த்துக்கொள்ள முடியும். அதுதான் நல்லதும்கூட”, என்றார்.
அஸ்மின் அலி பதவியில் இருக்கிறவரைக்கும் நடக்காது முன்னாள் சிலாங்கூர் மந்திரி பெசார் காலிட்டும் இவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் என்று நிருபித்துவிட்டார் அஸ்மின் அலி உங்கள் காயை லாவகமாக நகர்த்த ஆரம்பித்துவிட்டீர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்
சர்ச்சையே இனிமேல்தானே ஆரம்பம். பி.கே. ஆறிலும் டி.எ.பி.யிலும் புல்லுருவிகள் மொய்த்து விட்டனர். பி.கே.ஆரை உடைக்க அஸ்மின் அலி. டி.எ.பி.யை உடைக்க ‘மவன்’.