முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் சிஎன்என் இந்தோனேசியாவுக்கு அளித்த நேர்காணலில் குதிரைகள்மீது அவருக்குள்ள அளவற்ற விருப்பத்தை வெளிப்படுத்தினார். 40 குதிரைகள் வைத்திருப்பதாகவும் எல்லாமே அன்பளிப்பாகக் கிடைத்தவை என்றும் சொன்னார்.
அதே வேளை மலேசியாவின் முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளார் என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது கண்டனக் கணைகள் பாய்ச்சவும் அவர் தவறவில்லை.
அவரது பொழுதுபோக்கு நடவடிக்கைகள் பற்றி வினவியதற்கு அதற்கெல்லாம் நேரமில்லை என்று மகாதிர் குறிப்பிட்டார்.
ஆனால், நேரம் கிடைத்தால் குதிரை சவாரி செய்வதுண்டு என்றார்.
“என்னிடம் நிறைய குதிரைகள் உண்டு. கிட்டத்தட்ட 40. எல்லாமே மற்றவர்கள் கொடுத்தது. நான் எதையும் வாங்கியதில்லை.
“பாகிஸ்தானிலிருந்து இரண்டு குதிரைகள் வாங்க விரும்பினேன். அதைக் கேள்விப்பட்டு (அப்போதைய) அதிபர் சியா உல் ஹாக் இரண்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கினார்”, என்று நினைவு கூர்ந்தார்.
பிறகு நஜிப் பற்றிப் பேசியபோது, பிரதமர் பதவி விலகாவிட்டால் நாடு பாதிக்கப்படும் என்றார்.
வேறு ஒருவர் நாட்டை வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என்றவர் நினைக்கிறார்.
“2020-க்குள் ஒரு வளர்ந்த நாடாக விரும்பினோம். ஆனால், அது தாமதமாகலாம். ஏனென்றால் நாட்டை மேம்படுத்தும் நேரடி முயற்சிகள் கிடையாது.
“நாடு பல வகையான பிரச்னைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறது. நஜிப் அல்லாமல் வேறு ஒருவர் நாட்டை வழிநடத்தினால் கடந்த காலத்தில் போடப்பட்ட திட்டங்கள், குறிப்பாக 2020 தொலைநோக்குத் திட்டம் நிறைவேறும் வாய்ப்பு உண்டு”, என்றார். 2020 மகாதிரின் சிந்தனையில் உருவான ஒரு திட்டம்.
மகாதிர் மாமாக் கவலைபடாதீர்கள் எதிர்க்கட்சி கூட்டணி இந்த நாட்டை எந்த காலத்திலும் ஆட்சி செய்ய முடியாது அந்த தகுதியை அவர்கள் இழந்துவிட்டார்கள் இவர்களது ஒற்றுமை லட்சனையைதான் சரவாக் தேர்தலில் கண்டோமே உங்களை மக்கள் எப்படி நம்புவார்கள்!
குட் நியூஸ்
மக்களுக்கு குதிரை முட்டை கொடுக்க பார்த்தே,நாங்க உசாரு ஆயிட்டோம்.வேற வழி இல்லாமே இப்போ நீ குதிரை மேய்க்கிற…அதுங்க கிட்டயும் bumiputra குதிரை non bumiputra குதுரைன்னு பேதத்தை வளர்த்துராத! அப்புறம் தேவை இல்ல எத்து வாங்க வேண்டி இருக்கும்!!!
நம்பிக்கை நாயகன் மேடைதோறும், உன் காலத்தில் நீயும் செய்தாயே, நீயும் செய்தாயே என்றே கேட்டு, தமது செயல்களை நியாயப்படுத்தி அத்தனை பழியையையும் உம் தலையில் சுமத்துகிறார். நீர் அவரை அண்டை நாட்டாரிடம் குறை கூறுகிறீர், நாடு நல்லா வெளங்கிடும்.