ஈப்போவில் ஓர் இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அனைத்துத் தரப்பினருக்கும் ஆலோசனை கூறியுள்ளார்.
இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு மருத்துவர், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கும் அதிகாராப்பூர்வ தகவல் குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து ஐஜிபி இவ்வாறு கூறியுள்ளார்.
தங்களுடைய விசாரனையிலிருந்து சந்தேகத்திற்குரிய அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இது சம்பந்தமான மருத்துவ அறிக்கைகள் இருக்கின்றன என்று மலேசியகினியிடம் கூறிய ஐஜிபி காலிட், இச்சம்பவம் குறித்து எதையும் மறைக்க வேண்டிய காரணம் ஏதும் போலீசுக்கு கிடையாது. இது ஒரு நோயாளி சம்பந்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றார்.
இந்த நபருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், அவர் தாமாகவே இதைச் செய்துள்ளார் என்றும் காலிட் விளக்கமளித்தார்.
வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை
இவ்விவகாரம் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலிட் எச்சரிக்கை விடுத்தார்.
“இச்சம்பவம் ஒரு வழிபாட்டுத்தலம் சம்பந்தப்பட்டது. பொறுப்பற்ற அறிக்கைகளால் அமைதியின்மை ஏற்படுவதோடு விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்”, என்று காலிட் கூறினார்.
இன்று முன்நேரத்தில், இச்சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணையை போலீஸ் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ். மோகன் ஓர் அறிக்கையில் போலீசை கேட்டுக் கொண்டார்.
உண்மையைத் தெரிவிக்க வேண்டும்
இதனிடையே, சம்பவம் நடந்த கோயிலுக்கு பினான்கு மாநில துணை முதலமைச்சர் II ப. இராமசாமி சென்று அப்பகுதியிலுல்ள மக்களைச் சந்தித்தார்.
“சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு மன நோயாளி என்று எப்படி போலீசார் இவ்வளவு விரைவாக ஒரு முடிவெடுத்தனர் என்றும், அந்த நபர் தீவிரவாத கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரா” என்றும் மக்கள் வினவியதாக இராமசாமி தெரிவித்தார்.
இச்சம்பவம் கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடாது என்பது போலீசாரின் நோக்கம் என்பது நமக்குப் புரிகிறது. அதே நேரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.
“இச்சம்பவம் ஒரு வழிபாட்டுத்தலம் சம்பந்தப்பட்டது. பொறுப்பற்ற அறிக்கைகளால் அமைதியின்மை ஏற்படுவதோடு விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்”,”
குற்றம் செய்தவர் பின்னணியையும், அவர் தகப்பனார் பின்னணியையும், போலிசாரின் நடவடிக்கையாயம் வைத்துப் பார்க்கும் பொழுது மக்களுக்கு சந்தேகம் வருகின்றது. அதன் அடிப்படையில் கேள்வி எழுப்பினால் எப்படி குற்றமாகும். நாளுக்கு ஒரு சட்டம் ஆளுக்கு ஒரு நியதி. நல்லா விளங்கிடும் இந்த நாடு.
வணக்கம். குற்றம் செய்தவர் மன நோயாளி என்று சொன்னால் அவர் எங்கே சிகிச்சை பெற்றார். அப்படி சிகிச்சை பெற்றவர் என்றால் எதன் அடிப்படையில் அவரை வெளியே விட்டார்கள். இதே அவர் யாரையாவது கொலை செய்திருந்தால் என்ன செய்வார்கள். எங்கள் கோவிலை பற்றி கருத்து சொல்ல எங்களுக்கு முழு உரிமை உண்டு. அதை மிரட்டுவதற்கு போலிஸ் யார்.
உலகத்தில் படு மோசமான ஹாய் ஜி பி நீங்களாகவே இருக்கமுடியும் சந்தேகமில்லை. எப்பொழுது ‘எனக்கு தோசை என்றால் மிகவும் விருப்பம், என் வீட்டு முன் தோசை சுடவும், வாங்கி சாப்பிட சுலபமாக இருக்கும்’ என திருமதி அம்பிகா வீட்டு முன் நடந்த மறியலில் போது, மறியல் செய்தவர்கள் மீது நடவக்கை எடுக்காமல் நையாண்டி செய்தபோதே உங்கள் மீது இருந்த மரியாதை உலக அளவில் நீங்கள் ஒரு முட்டாள் என தெரிந்து விட்டது. உங்களை நேரிடையாக சந்திக்க முடியாவிட்டாலும் எங்களின் மனவேதனை இறைவன் மூலமாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்களாக.
ம்ம், அதுக்கு நாங்க எதற்கு ? நீங்களே நல்லா யூகம் செய்து தகவல் வெளியிடுறீங்களே ? , சம்பவம் நடந்த உடனே குற்றவாளி மனநிலை குன்றியவன் என ஓர் அபாரமான யூகத்தை மருத்துவப் பரிசோதனை வெளிவரும் முன்பே வெளியிட்ட உங்களை யாராவது மிஞ்சமுடியுமா சொல்லுங்கள் ?
ஐ ஜி பி உங்களை பொறுத்தவரை சட்டம் என்பது ஏட்டு அளவில்தான்!தமிழர்களை பொருத்தமட்டில் உங்களுடைய ஏட்டு சட்டம் பாதாளவரைக்கும் பாயும் உங்கள் இனம் உங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் சொல்லவேவேண்டாம் எதற்கும் ஒரு அளவுண்டு அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு…நினைவிருக்கட்டும்!எதற்கும் ஒரு காலமுண்டு குட்ட குட்ட குனிபவன் என்றுமே மடையன் அல்ல காலந்தான் பதில் சொல்லும் இந்து தெய்வ சிலைகளை உடைத்தவனுக்கும் அவன் சார்ந்தவர்கள் இனத்துக்கும் அழிவு காலம்தான் எல்லா வல்ல இறைவன் பார்த்துகொள்வார்!!!
உலக மகா மடையர்கள் சங்கம் ஒன்றை ஆரம்பித்து, அதற்கு யாரை தலைவனாக போடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.இப்போது பிரச்னை தீர்ந்தது.
தவறு செய்தவன் பைத்தியம் என உடனே ஊகம் செய்வதும் தவறே .
மலேசிய போலீசிடம் நாம் நியாயம் கேட்பதும் கல்லை கட்டி கொண்டு நடுகடலில் குதிப்பதும் ஒன்றுதான் ..இந்து சங்க வடுக தலைவன் என்ன பண்றார் ?தெலுங்க சங்கத்திருக்கு காசு வசூல் பண்ண போய்ட்டாரா இல்லை தமிழனிடம் இருக்குற கொஞ்சம் நஞ்சம் வேஷ்டிய எப்படி உருவலாம்னு யோசிக்குறாரா?
ஹிண்ட்ராப் என்ன செய்கிறது?