பேங்க் நெகரா கவர்னர் நியமனத்தில் கடைசி நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டதாம், WSJ கூறுகிறது பேங்க் நெகராவின் புதிய கவர்னராக கருவூலத் தலைமைச் செயலாளர் இர்வான் சிரிகார் அப்துல்லா நியமிக்கப்படுவார் என்று முன்னர் தான் கூறியிருந்தது பொய் என்று கூறப்படுவதை வால் ஸ்திரிட் ஜர்னல்(WSJ) மறுத்துள்ளது.
மலேசியாகினிக்கு அனுப்பிவைத்த அறிக்கையொன்றில், ஸெட்டி அக்தார் அசீசுக்குப் பின்னர் பிரதமருக்கு நெருக்கமான ஒருவர்தான் பேங்க் நெகாரா கவர்னராக நியமிக்கப்படுவார் என்று கூறியது உண்மைதான் என்று WSJ கூறியிருந்தது. பேங்க் நெகாரா புதிய கவர்னராக முகம்மட் இப்ராகிம் நியமிக்கப்பட்டிருப்பதானது WSJ கூறியது “உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் சொல்லப்பட்ட மற்றொரு பொய்” என்பதைக் காட்டுவதாக நஜிப்பின் பத்திரிகைச் செயலர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அஹ்மட் கூறியிருப்பது குறித்து அந்த அமெரிக்க நிதியியல் நாளேடு கருத்துரைத்தது.
இர்வானுக்குப் பதிலாக முகம்மட் இப்ராகிமை நியமனம் செய்வதென்பது கடைசிநேர முடிவு, அழுத்தத்தின் காரணமாக அடிக்கப்பட்ட “பல்டி” என்று அந்நாளிதழ் கூறியது.
“மாத இறுதியில் பணிஓய்வு பெறும் ஸெட்டி வங்கியைச் சேர்ந்த ஒருவர்தான் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட வேண்டும் என்று கொடுத்த அழுத்தத்தால்தான் அந்த மாற்றம் ஏற்பட்டது எனத் தகவலறிந்த வட்டாரம் ஒன்று தெரிவித்தது”, என WSJ கூறியது.
எவ்வளவு பித்தலாட்டம்?