ஓர் ஆசிரியரான இந்திரா காந்தி தம் மகளைப் பார்த்து எட்டு ஆண்டுகள் ஆகின்றன. அவரின் கணவர் கே.பத்மநாதன் (இப்போது முகம்மட் ரிதுவான் அப்துல்லா) இஸ்லாத்துக்கு மதமாறியபோது அவர்களின் 11-மாத மகளையும் எடுத்துச் சென்று விட்டார்.
மகளைத் தம்மிடம் கொண்டு வந்து ஒப்படைக்க போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்காருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி எட்டு மாதங்களுக்குமுன் இந்திரா காந்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
2014-இல், ஈப்போ உயர் நீதிமன்றம் ரிதுவானைக் கண்டுபிடித்து கைது செய்து இந்திரா காந்தியின் இளைய மகளை அவரிடமே ஒப்படைக்க வேண்டும் என காலிட்டுக்கு உத்தரவிட்டது.
போலீஸ் தலைவர் மேல் முறையீடு செய்தார்.
மூன்று மாதம் கழித்து முறையீட்டு நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.
அதன் பின்னர் இந்திரா காந்தி வழக்கை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்.
அங்கு ஐந்து நீதிபதிகள் குழு விசாரணை நடத்தியது. நாளை அது தீர்ப்பு வழங்கும்.
ஐஜிபி.மற்றும் பி.என்.அரசாங்கம் உங்களுக்கெல்லாம் என்னுடைய கேள்வி…இந்நாட்டு மலேசிய இந்தியர்கள் என்ன தேச துரோகங்கள் செய்தார்கள் என்று பட்டியலிடமுடியுமா?ஐ எஸ் ஐ எஸ் உறுபினர்களா?முன்னாள் கம்னியுஸ்சா அல்லது வேறு ஏதாவது பயங்கரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்களா?இதில் எதிலுமே தொடர்பற்றவர்கள் என்று இந்த நாடே என்ன உலகமே அறிந்ததுதான்..இந்தியர்கள் மேல் இந்த நாட்டு அரசாங்கத்துக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று புரியவேயில்லை!!நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றதுக்கும் இந்தியர்களின் பங்கு அளப்பரியது உலகத்துக்கே தெரியும் ஒன்று மட்டும் மறுக்கபடாத உண்மை…உலகத்தில் எந்த நாட்டினரும் இனவெறியை தூண்டிவிட்டால் நாடே அழிவு பாதைக்கு சென்று விடும் என்பதை மறந்துவிடாதீர்கள்
நீதிபதிகள் 1 மலேசியாவாக 3யினம் இருந்தால் வெற்றி , இல்லை ஒரே இனமாக இருந்தால் அவ்வளுவுதான் .
இந்த நிகழ்வானது நமது நாட்டில் மத தீவிரவாதத்தைத்தான் காட்டுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
சகோதரி, “தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது” எனக் கூறும் புனித மார்க்கத்தை சார்ந்தவர்களிடம் ஒரு தாயாக, தங்கள் குழந்தைக்காக போராடி நிற்கும் தங்களின் வேதனை எத்தனை ஆழமானது என்பதை சிந்திக்கும்போது மிக மிக வருத்தமாக உள்ளது. அதிலும் மீண்டு போராடும் உங்களைப் பாராட்ட எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. உங்கள் துயரங்கள் அனைத்திற்கும் மூலக்காரணம் தங்களின் முன்னாள் கணவர்தான். அதற்குப் பிறகுதான் மற்றவர்கள். நீங்கள் வெற்றிபெறவேண்டும், உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும், உங்களுக்காக நாங்களும் இறைவனை இரைஞ்சுகிறோம். வாழ்க