சரவாக் பிகேஆரும் டிஏபியும் சரவாக் மாநிலத் தேர்தலில் ஆறு இடங்களில் ஒன்றை எதிர்த்து மற்றொன்று போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை என்ற போதிலும் அதைப் பெரிதுபடுத்தாது மாநிலத் தேர்தலில் கவனம் செலுத்தப் போவதாக பிகேஆர் தெரிவித்துள்ளது.
“நான் இதன்(சச்சரவு)மீது கவனம் செலுத்த விரும்பவில்லை. இதைக் கடந்து செல்ல விரும்புகிறேன்”, என பிகேஆர் உதவித் தலைவரும் தேர்தல் இயக்குனருமான நூருல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
தொகுதி தொடர்பான சச்சரவுக்கு யார் காரணம் என்று அவர் விவரிக்கத் தயாராக இல்லை.
மே 7 சரவாக் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அவ்விவகாரத்தை ஆராயும் என்றாரவர்.
சரவாக் சச்சரவு தீவகற்ப மலேசியாவுக்குப் பரவாது என்று பந்தாய் எம்பியுமான நூருல் நம்புகிறார். தீவகற்பத்தில் பக்கத்தான் ஹராபான் உறவுகள் வலுவாக உள்ளன என்றார்.
அம்மா அறிவுக் களஞ்சியமே! தீவகற்பத்தில் இந்த பிரச்சினை உருவெடுக்காது என எதை வைத்து சொல்கிறீர்? என்ன உத்திரவாதம்? தீவகற்பத்தை சேர்ந்த டி.எ.பி.யின் அந்தோணி லோக், பி.கே.ஆரின் சேவியர் ஜெயகுமாரும் இப்பிரச்சினை தொட்டு சரவாக்கில் மாரடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாதா? மக்களை நன்னாதான் குழப்புகிறீர்கள்.
தெரிஞ்சிடிச்சி அங்கே கவுந்துடும் என்று , வாங்கடா …அடுத்ததுக்கு போவோம் !!!