எதிரணித் தலைவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தொடர்ந்து தடை விதித்துவரும் சரவாக், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மே 2வரைதான் அவர் அங்கிருக்க முடியும்.
“மே2-இல் சரவாக்கை விட்டு வெளியேற வேண்டும் என சரவாக் குடிநுழைவுத்துறை கூறியுள்ளது. யாருடைய உத்தரவு இது?”, என அஸ்மின் டிவிட்டரில் வினவியிருந்தார்.