கோயில் சிலைகளை உடைத்த நபர் மீது இன்று குற்றம் சாட்டப்படும்

 

suspecttobe chargedஈப்போவில் ஓர் இந்து கோயிலில் சிலைகளை உடைத்த நபர் இன்று ஈப்போ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் குற்றவியல் சட்டம் செக்சன் 295 இல் கீழ் குற்றம் சாட்டப்படுவார்.

ஏப்ரல் 24 இல், மாலை மணி 5 அளவில் ஈப்போ இந்து கோயிலில் புகுந்து சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையை போலீசார் முடித்துக் கொண்டுள்ளனர் என்று பேராக் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹிம் ஹனாபி ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்நபர் தற்போது தற்போது தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா மருத்துவமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.