இந்திரா காந்தி குழந்தை பராமரிப்பு வழக்கில் பெடரல் உச்ச நீதிமன்றம் குற்றவாளி முகமட் ரித்துவான் அப்துல்லாவை கைது செய்யுமாறு போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பாகாருக்கு இன்று உத்தரவிட்டது. அந்த உத்தரவை காலிட் நிறைவேற்றுவார்.
இதற்கு முன்னர், இந்த விவகாரத்தில் போலீஸ் நடுநிலைமை வகித்தது. அதன் கூற்றுப்படி சிவில் நீதிமன்றமும் ஷரியா நீதிமன்றமும் ஒரே மாதிரியான தகுதியுடையவை; அவற்றின் தீர்ப்புகள் ஒன்றுக்கொன்று முரணானதாக இருந்தன.
“எனினும், நீதி பரிபாலன அமைவின்படி பெடரல் நீதிமன்றம் நாட்டின் உச்ச நீதிமன்றமாகும். போலீஸ் அதன் உத்தரவுப்படி நடந்துகொள்ளும். நாங்கள் கைது ஆணையை நிறைவேற்றுவோம்”, என்று காலிட் இன்று கூச்சிங்கில் செய்தியாளர்களிடம் கூறினார்.
Rules is rule police must obey courts order even police did not respect then public how can respect
சும்மா வெறும் பேச்சி இல்லாமல் உடனடியாக அவனை கைது செய்து ஆக வேண்டும்..
நீதி தெரியாதே கபோதி !
முறைய படித்து பதவிக்கு வந்திருந்தால் சட்டம் தெரியும்,
போலிஸ் படை தலைவரே!இன்னுமா முஹம்மது ரித்துவானை கைது செய்யவில்லை!!!இல்லை என்றால்..உடனடியாக கைது செய்யுங்கள் ரித்துவன் தாய்லாந்துக்கு தப்பி செல்லும் வரை காத்திருக்கபோகிரீர்களா!இது நடந்துவிட்டால்…நான் உங்களை தாறுமாறாக மரியாதைக்குறைவாக திட்ட வழிவகுத்துகொள்ளாதீர்கள் உங்களது மரியாதையை நீங்கள் காப்பாற்றி வேண்டுமெனில் உடனடியாக செயலில் இறங்கினால் நன்று..போலிஸ் படை தவற்றால் ஏற்கனவே ஒருத்தன் தப்பி ஓடி ஆஸ்திரேலியாவில் சுக போக வாழ்க்கையில் திளைத்துகொண்டிருக்கிறான்…..ஹர்ரி-ஆப்!