பண்டை மலாய் வீரர் ஹங் துவா மீதான விவாதம் ஓயாதுபோல் தெரிகிறது.ஹங் துவா பற்றிக் கல்வியாளர்களிடையேயும் மக்களிடையேயும் விவாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நேற்று, மலாயாப் பல்கலைக்கழகத்தில் ‘Antara Sejarah dan Mitos: Sejarah Melayu & Hang Tuah dalam Historiografi Malaysia’ என்னும் நூலை வெளியிட்ட நிறைநிலை பேராசிரியர் அஹமட் ஆடம், ஹங் துவாவின் பெயரே இதுவரை தவறாகத்தான் உச்சரிக்கப்பட்டு வந்துள்ளது என்றார்.
“200 ஆண்டுகளுக்கு மேலாக மலேசியர்கள் ‘ஹங் துவா’வைத் தவறாகத்தான் உச்சரித்து வருகிறார்கள். இப்படி புதிதாக ஒன்றைச் சொன்னால் ஏற்றுக்கொள்வது சிரமமாகத்தான் இருக்கும். அது மனித இயல்பு. ஆனாலும் வரலாற்றைச் சரிப்படுத்துவது முக்கியம்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அந்நிகழ்வில் பேசிய பேராசிரியர் ஹென்ரி சாம்பர்ட்-லோயர், பண்டைய மலாய், ஜாவானிய மொழிகளின் உச்சரிப்பின்படி ‘ஹங் துவா’வை ‘ஹங் து-ஹா’ அல்லது ‘ஹங் தோ’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்.
எதுக்கும் இன்னொரு முறை சரி பார்த்து கொள்ளுங்கள் இவர் நிறைநிலை பேராசிரியரா அல்லது மனநிலை பேராசிரியரா?
Han-tu பேராசிரியர்.
பரமேஸ்வர காணமல் போனமாதிரி , ஹங் துவாவும் காணமல் போய்விடுவர் ! ஹங் மகாதிர் , ஹங் நஜிப் என்று சரித்திரம் திருத்தி எழுதப்படும் !
இவரின் உண்மையான பெயர் hang toh ah . இவர் உம்மையில் ஓர் சீனர் வம்சாவளியை சேர்த்தவர் . இவர் puteri hang li po உடன் வந்த மெய்காப்பாளர் . இவருடன் மற்ற நால்வர் வந்தனர் . ஆனால் நமது சர்திரம் ஜீவிகள் மலாய் வீரர் என மாற்றிவிட்டனர் .