அம்னோவும் பாஸும் கூட்டுச் சேர்ந்தால் அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் கூறினார்.
“அம்னோ பாஸுடன் கைகோத்தால், மலாய்க்காரர் ஒற்றுமையின் பொருட்டு கூட்டுச் சேர்ந்தால், தேர்தலில் வெற்றி பெற முடியும்”. இன்று செர்டாங்கில், கோலாலும்பூர் அனைத்துலக புத்தக விழாவில் ‘Saya Bukan Menteri: Memoir Wartawan Negara’ என்ற அவருடைய நூலின் வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சைனுடின் இவ்வாறு தெரிவித்தார்.
“மலாய்க்காரர்கள் எதிர்காலம் குறித்து கவலை கொண்டிருப்பதால்” அம்னோவும் பாஸும் ஒன்று சேர்வது அவற்றின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என்றாரவர்.

























