முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் தாம் வளர்த்து ஆளாக்கிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் தோற்றுப் போவாரா?
மாட்டார் என்றே முன்னாள் தகவல் அமைச்சர் சைனுடின் மைடின் நினைக்கிறார்.
“அவர் தோற்பார் என்று நான் நினைக்கவில்லை. (வெற்றிதோல்வியை) தீர்மானிக்கப்போவது அடுத்த பொதுத் தேர்தல்தான்”, என்று சைனுடின் குறிப்பிட்டார்.
சைனுடின் செர்டாங்கில், கோலாலும்பூர் அனைத்துலக புத்தக விழாவில் தம்முடைய ‘Saya Bukan Menteri: Memoir Wartawan Negara’ என்ற நூலின் வெளியீட்டுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பிரதமர் தம்மை வெற்றி பெற்றவர்போல் காண்பித்துக்கொள்ள நினைத்தாலும் மக்கள் அவர்மீது மிகவும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள் என்றாரவர்.
“ஒரு டெக்சி ஓட்டுனரைக் கேட்டேன், மக்கள் ‘நஜிப்பை’ ஏற்றுக்கொள்கிறார்களா என்று. ‘இல்லை, இல்லை, டெக்சி ஓட்டுனர்கள் எவரும் அவரை ஏற்கவில்லை என்றவர் சொன்னார்”, என்றார்.