சரவாக் தேர்தலில் டிஏபியின் தேர்தல் பரப்புரை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை, கூச்சிங், சிபு, மீரி ஆகிய இடங்களில் நடைபெற்ற ‘செராமா’க்களுக்கு ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.
எதிரணி தேர்தல் பரப்புரை முதல் ஐந்து நாள்களுக்கு மந்தமாகமாகவே இருந்து வந்த நிலையில் நேற்று தேர்தல் கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வந்திருந்தது ஊக்கமளிப்பதாக இருந்தது.
கூச்சிங் செராமாவுக்கு 2,300 பேர் வந்திருந்தனர். சிபுவிலும் மீரியிலும் முறையே 2,500, 2,000.
வெள்ளிக்கிழமை கூச்சிங் ஜாலான் துன் ஜுகா செராமாவில் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் கலந்துகொண்ட செராமாவுக்கு ஈராயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
ஜாலான் துன் ஜுகா செல்லும் சாலைகள் லிம்மைப் பார்ப்பதற்காக வந்த மக்கள் கூட்டத்தால் நிரம்பி இருந்தன.
கூட்டத்தில் பேசிய லிம், 1எம்டிபி மோசடியைக் கடுமையாகச் சாடினார். அது பட்ட கடன்களை மக்கள் கொடுக்க வேண்டியிருப்பதாகக் கூறினார்.
“எப்படியோ இருக்க வேண்டியது சரவாக். உங்களிடம் அளவில்லா வளம் இருக்கிறது. ஆனாலும், பலர் வறுமையில் வாடுகிறார்கள்”, என்றாரவர்.
சரவாக்கில் அடுத்த சனிக்கிழமை தேர்தல். 1.14 மில்லியன் சரவாக்கியர்கள் அதில் வாக்களிப்பார்கள்.
hello PENDUDUK SARAWAK BODOH DAN BANGGANG YANG UNDI UNTUK PARTI RASUAH BN PAKAI OTAK SIKITLAH TUKAR KERAJAAN JANGAN HIDUP MACAM KATAK DI BAWAH TEMPURUNG
கூட்டம் கூடினால் எதிர்கட்சிகளுக்கு ஆபத்து. சீனர்கள் அதிகமாக எதிர்க்கட்சி கூட்டங்களுக்கு திரண்டால், அக்கட்சிக்களுக்கு ‘ஆப்பு’ வைக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். தெலுக் இந்தான் இடைத்தேர்தலின் போது, [தேர்தலுக்கு முதல் நாள்], புகழ்ப்பெற்ற ‘மணிக்கூண்டு’ பக்கத்தில் பாரிசான் கூட்டத்திற்கு வெறும் 70 பேர்தான் கூடினார்கள். டி.எ.பி. கூட்டத்திற்கு 10,000 பேர் குறைவில்லாமல் கூடினார்கள். மறுநாள், சீனர்கள் டி.எ.பி.க்கு வைத்தார்கள் ‘ஆப்பு’. சீனர்கள் பற்றி நான் நன்கறிவேன்.