முஸ்லிமாக மதமாறிய முகம்மட் ரிதுவான் அப்துல்லாவைப் போலீசார் தேடுகிறார்கள். ஆனால், அவர் இருக்கும் இடம் தெரியவில்லை.
ரிதுவான் செல்லக்கூடிய இடங்களில் எல்லாம் போலீசார் தேடிப் பார்த்து விட்டார்கள். ரிதுவானின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களையும் விசாரித்து விட்டனர். அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை என ஈப்போ போலீஸ் தலைவர் சம் சாங் கியோங் தெரிவித்தார்.
“எல்லாரையும் கேட்டுப் பார்த்தோம். யாருக்கும் தெரியவில்லை. இதற்கு (உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு) முன்பே அவரைக் கண்டுபிடிக்க முயன்றோம். முடியவில்லை”, என சம் கூறியதாக த ஸ்டார் ஆன்லைன் அறிவித்தது.
ரிதுவான் ஈப்போவில் வைத்திருந்த வழக்குரைஞரை மாற்றி விட்டதாகவும் ஈப்போ போலீஸ் தலைவர் சொன்னார். வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றபோது புதிய வழக்குரைஞரை அமர்த்திக் கொண்டார். ரிதுவானின் இப்போதைய வழக்குரைஞரின் தொலைபேசி எண் போலீசிடம் இல்லை.
“இந்திரா காந்தியின் வழக்குரைஞர் எம்.குலசேகரனுக்கு அந்த வழக்குரைஞரைத் தெரிந்திருக்கலாம். அவர் அந்த எண்ணைப் போலீசுக்குக் கொடுத்து உதவலாம்.
“என்னுடைய அதிகாரம் ஈப்போவில் மட்டும்தான்”, என சம் குறிப்பிட்டார்.
உச்சமன்றத் தீர்ப்பு அவருக்கு ஏற்கனவே போயிருக்கும்! அதற்கு எங்கு போய் ஒளியலாம் என்று தீர்ப்பு அவருக்குப் போகும் போதே சொல்லப்பட்டிருக்கும்! ஏதோ ஒரு பள்ளிவாசலில் ஒளிந்து கொண்டிருக்கலாம்! அல்லது ஏதோ ஒரு இமாம் வீட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம்! வெளியே கூட நடமாடிக் கொண்டிருக்கலாம்! அவர் பழைய பத்மநாதன் இல்லை’ முகமது ரித்வான்! அவர் இதற்குள் கூடு விட்டுக் கூடு பாயும் கலையை ஏதேனும்”அறிஞரிடம்” கற்றுக் கொண்டிருக்கலாம்! நிச்சயமாக இங்குள்ள காவல்துறை அவரைக் கண்டுபிடிக்க வழியில்லை! இன்டர்போல் ஒருவேளை உதவலாம்!
இவர்களே மறைப்பார்கள், இவர்களே தேடுவார்கள். இனிமேல் தேடிகொண்டேதான் இருப்பர்கள்
ஆட்டை தோளில் போட்டுக்கொண்டு ஆட்டை காணாம் என்கிற கதையாக இருக்கிறது காவல் துறையின் அறிவிப்பு..? நல்ல வேடிக்கை.
போதுமடா உங்கள் கபட நாடகம்.இதுவே மற்றவர்கள் செய்திருந்தால் நீதிமன்ற தீர்ப்புக்கு உடனே நடவடிக்கையில் இறங்கியிருக்கும் இந்த காவல் துறை. இதுதான் நாட்டின் நடப்பு.
“அடாதுசெய்பவன் படாதுபடுவான்”, இந்த நபர் மனிதனின் தீர்ப்பை ஏய்க்கலாம், இறைவன் தீர்ப்பை என்றும் மாற்ற முடியாது. ஒரு தாயின் வயிற்றெரிச்சலில் குளிர் காயும் இந்த நபரை இயற்கையும் மன்னிக்காது. கூடிய விரைவில் பிடிபட்டு அதிகபட்ச தண்டனை அனுபவிக்க நமது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
rith mh370 பட்டியலில் சேர்த்து விட வேண்டியதுதான் ! சைபூல் ஆசனவாயில் கண்டு எடுத்தது அன்வாரின் விந்துதான் என்று சொன்னவர்கள் வரிசையில் நின்று பதில் சொல்லலாம் !
போலிஸ் படை தலைவரே!பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவீர்களோ!என்ன செய்வது..இப்போ உங்க காட்டுல மழை!
ஈபோவின் போலிஸ் தலைவர் , முகம்மது ரிடுவானை தேட முடியாமல் மிகவும் எளிதில் சரணடைந்து விட்டார்.
வணக்கம். அப்படி போலிசால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் பகிரங்கமாக பொதுமக்கள் உதவியை நாட வேண்டியது தானே அதற்கு ஏன் கால தாமதம். பொது மக்களே கண்டு பிடித்தால் மனித உரிமை மீறல் என்பார்கள். போலிஸ் முதலில் அறிவித்தால் எந்த பிரச்சனையும் கிடையாது.