பிபிபி உதவித் தலைவர் அபாங் ஜொகாரி ஓபெங், சரவாக்கில் பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலியின் தங்கும் காலத்தைக் கட்டுப்படுத்தும் கட்சித் தலைவரும் முதலமைச்சருமான அடினான் சாதேமின் முடிவைத் தற்காத்துப் பேசினார்.
“அஸ்மின் சரவாக் அவருடைய (அடினான்) அப்பன் மாநிலம் அல்ல என்று கூறியுள்ளார்.
“அவருக்கு (அஸ்மினுக்கு( நான் பதில் அளிக்கிறேன்.
“இது அவரின் (அடினான்) அப்பன் மாநிலம்தான். உங்கள் அப்பாவுடையதோ தாத்தாவுடையதோ அல்ல”, என இன்று மீரியில் பிபிபி கூட்டமொன்றில் அபாங் ஜொகாரி கூறினார்.
விசாவை நீட்டிக்க விரும்பினால் அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதிக் கேட்கலாம் என்று கூறிய அடினானை சாடியபோது அஸ்மின் அவ்வாறு கூறினார்.
“இது உங்கள் அப்பன் மாநிலம் அல்ல. இது சரவாக் மக்கள் அனைவருக்கும் உரியது”, என்று அஸ்மின் சாடியிருந்தார்.
if west malaysia people can not go to east malaysia < . Then how ?
சரவாக்கிலுள்ள அழுக்கையெல்லாம் புளி போட்டு வெளக்க வந்த “புத்திசாலி” அமைச்சர் !! நீர் பிழைத்துக்கொள்வீர் !!
இவன்கள் tapai ,montakko குடித்து விட்டு போதையில் உலருகிறான்கள்..$$$$$$$$$$
அபாங் ஜோஹாரி ஒபெங்!!சரவாக்.. அடீனான் சாத்தேம் அப்பனுடையதுதான் என்று உங்களால் நிருபிக்கமுடியுமா! ஒரு கட்சியின் துணைத்தலைவர் இப்படியெல்லாம் பொருப்பின்றி பேசுவது உங்கள் முட்டாள்தனத்தை என்னவென்று கூறுவது!!சிந்திக்க தன்மையற்ற உங்களை போன்றவர்கள் எப்படி ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கீறீர்கள் என்று புரியாத புதிர்…..சரவாக் அவருடைய அப்பனுடையதுதான் என்றால் ஏன் தேர்தல்?ஏன் பண விரயம்!சரவாக் மக்கள் மேல் அக்கறை இருந்திருந்தால்…….