சரவாக் தேர்தல் பரப்புரைகளில் நிதி ஒதுக்கீடுகள் பற்றி பாரிசான் அரசாங்கம் அறிவிப்பது குறித்து கருத்துரைக்க தேர்தல் ஆணைய(இசி)த் தலைவர் முகம்மட் ஹாஷிம் மறுத்தார்.
சரவாக் பிஎன் தேர்தலில் நல்ல வெற்றியைப் பெற்றால் அம்மாநிலத்தின் மேம்பாட்டுக்கு பில்லியன் கணக்கான ரிங்கிட்டை வழங்குவதாக பிரதமர் நஜிப் ரசாக் வாக்குறுதி அளித்தது தேர்தல் விதிகளை மீறுவதாகாதா என்று வினவியதற்கு, “அது பற்றிக் கருத்துரைக்க இயலாது”, என்று கூறினார்.
“தேர்தல் பரப்புரை காலத்தில் தேர்தல் சீராக நடப்பதை உறுதிப்படுத்துவதான் ஆணையத்தின் கடமை. வாக்குச்சீட்டுகள், குடைகள் போதுமான அளவில் உள்ளனவா என்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறோம்”, என ஹாஷிம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இசி தேர்தல் பரப்புரைகளில் சம்பந்தப்பட்டால் பிறகு அது இசியாக இருக்காது.
“வாக்காளர்கள் யாரை ஆதரித்தாலும் வாக்களிக்க திரண்டு வர வேண்டும். அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை ஏற்பதா, விலக்குவதா என்பதை அவர்கள்தாம் தீர்மானிக்க வேண்டும்”, என்றாரவர்.
பாரிசான் கூட்டணிக்கு ஒத்துழைத்தாலும், அதன் வெற்றியை நிர்ணயிக்க தேர்தல் முறைகளில் பல தில்லு முல்லுகளை புரிந்து, அதன் வெற்றிக்கு துணை புரிந்ததால், முன்னாள் தேர்தல் ஆணைய தலைவருக்கு பகாங்கில் 400 ஏக்கர் வெட்டு மர காடுகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதே போன்ற அன்பளிப்புகளை பெற அடுத்தடுத்து வரும் இசி தலைவர்கள் பல தில்லு முல்லுகளை புரிந்துதான் ஆகவேண்டும்.
அரசின் முழு யந்திரமும் தில்லு முல்லில் தான் இயங்கி கொண்டிருக்கிறது.
அவனுக்கு பாரிசான் ஊழல், முறைகோடு குறித்து பேச எப்படி வாய் வரும். அவனுடைய முழு வளர்ப்பும், அவன் குடும்ப வாழ்வும் தவறான வழிகளில் அம்னோ இட்ட பிச்சை. அதனை அப்படியே ஏத்துக் கொண்டால்தான் இந்த பிச்சைக்காரனுக்கு வாழ்வு நிலைக்கும்.