பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் தேர்தல் பரப்புரை ஒன்றின்போது முஸ்லிம்-அல்லாத பூமிபுத்ராக்கள் தலைவர்களாக இருக்கலாம் ஆனால் சாபா, சரவாக்கை முஸ்லிம் பூமிபுத்ராக்களே ஆள வேண்டும் என்று கூறியதைப் பலரும் சாடியுள்ளனர்.
டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அது “கடுமையான, தீவிரவாதம் நிறைந்த அரசியல் கருத்து” என்று வருணித்தார்.
அது ஹாடி முஸ்லிம்- அல்லாதாருக்கு எதிரி என்பதைக் காண்பிக்கிறது என்றார்.
அது, சரவாக்கில் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம்- அல்லாத பூமிபுத்ராக்களுக்கு “சினத்தை” உண்டு பண்ணலாம் என லிம் குறிப்பிட்டார்.
“முஸ்லிம்- அல்லாத பூமிபுத்ராக்கள் சரவாக்கின் மிக உயர்ந்த பதவியான முதலமைச்சர் பதவிக்குத் தகுதியற்றவர்கள் ஆனது ஏன், அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதாலா?”, என்றவர் வினவினார்.
ஒரு முஸ்லிம் பூமிபுத்ராவான அடினான் சாதேமைத் தங்களின் முதலைமைச்சராக ஏற்றுக்கொண்டிருக்கும் முஸ்லிம்- அல்லாத பூமிபுத்ராக்கள் ஹாடியைக் காட்டிலும் திறந்த மனமும் மலேசிய உணர்வும் கொண்டவர்கள் என பினாங்கு முதலமைச்சருமான லிம் கூறினார்.
ஒரு சீனர் சரவாக் முதலமைச்சர் ஆக வேண்டுமென என்றும் தாம் சொன்னதில்லை எனவும் லிம் குறிப்பிட்டார்.
ஹாடி ஏன் ஒரு சீனர் சரவாக் முதலமைச்சர் ஆகப் போகிறார் என்று பூச்சாண்டி காட்டி வாக்காளர்களைப் பயமுறுத்துகிறார் என்பதும் தமக்குப் புரியவில்லை என்றாரவர்.
சரவாக் வாக்காளர்களில் முஸ்லிம்களை விட முஸ்லிம் அல்லாதவர்களே அதிகம். இப்பிரச்சினையை அரசியல் ரீதியில் எதிர்கட்சிகள் அரசதந்திரத்துடன் நன்முறையில் பயன்படுத்திக் கொண்டால், மேலும் சில தொகுதிகளில் [தற்போது இருப்பதை விட] வெற்றி பெற வாய்ப்புண்டு.
இந்த ஈன ஜென்மத்தை என்ன சொல்வது–இவனெல்லாம் தலைவன். மத வெறி பிடித்த சண்டாளனுக்கும் அவனை சார்ந்த எதற்கும் ஆதரவு கொடுப்பது மா பாவம். நினைக்கவே எரிகிறது–
சுயநலச்செம்மலே உமக்கெல்லாம் எதற்கு பாக்காத்தான் ?
பூமி புத்ரா என்பதற்கு அர்தம் தெரியாமல் உளறுகிறான் ??????$$$$$$$$$$ எதிர் கட்சியினர் ராஜ தந்திரத்தை பயன் படுத்தினால் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது .
அடி வாயக் கொடுத்து அடி வாங்க துணிஞ்சிட்டான். ஆனால் பாராட்டுக்குரியவன். அவனுங்க விசயத்தில் தமிழன் கருத்து சொல்ல தகுதியில்லாதவன். உலகின் மூத்த குடியாம் இவனுக்கு ஒரு தேசமில்லை. அதிகம் தமிழன் இருக்கிற மாநிலத்திலேயே முதல் அமைச்சரா, தமிழனுக்கு தலைவனாக வரக்கூட தமிழனுக்கு யோக்கியதை இல்லை. ஏன் அதிகம், இந்திய இனத்தில் தமிழன் அதிகம் இருக்கும் சிலாங்கூர் மாநிலத்தில் தமிழர்களுக்கு நன்கு சேவை செய்த தமிழனை கவிழ்க தமிழர்கள் இரண்டு தெலுங்கர்களுடன் சேர்ந்துக் கொண்டு குழி பறித்தார்கள். ஆனால் கேடுகெட்ட அந்த கும்பல் ”தமிழன்” என்ற அடைமொழியை பெயராக கொண்ட இயக்கத்தை பயன்படுத்தி தமிழனை அழிக்கிறது. இப்படிப்பட்ட நம்மினம் , சிறுபான்மை மலாய் சமுதாயத்திடம் பாடம் கற்க வேண்டும். நாகரீகமில்லா காட்டுவாசிகளுக்கு உள்ள உணர்வு கூட இல்லாத நமக்கு இல்லை. மற்றவர்களுக்கு அறிவு சொல்லத் நாம் தகுதியானவர்களா?
நாதனின் கருத்து யோசிக்கப்பட வேண்டியவை. தமிழகத்தை பற்றி பேசுகிறோம் . இங்கே என்ன வாழுது? தெலுங்கனின் ஆளுமை இங்கேயும் இருக்குது.