அரசியல்வாதிகள் மீதான தடையை அகற்றுவீர்: சரவாக்கிடம் அம்னெஸ்டி இண்டர்நேசனல் கோரிக்கை

aiசரவாக்  அரசு பேச்சுரிமையைக்  கட்டுப்படுத்தும்  எல்லாச்  சட்டங்களையும்  மறுஆய்வு  செய்து திருத்த  வேண்டும்  என  உரிமைகளைக்  கண்காணிக்கும்  அம்னெஸ்டி  இண்டர்நேசனல் (ஏஐ) அமைப்பு  கேட்டுக்கொண்டிருக்கிறது.

அதன் தொடர்பில்  அம்மாநில  அரசு  அரசியல்வாதிகளுக்கு  விதிக்கப்பட்டுள்ள  நுழைவுத்  தடையையும்  நீக்கி, அவர்கள்   தேர்தல்  காலங்களில்  சுதந்திரமாக  நடமாடுவதற்கும்  வழிகோல  வேண்டும்  என்று அது  கோரிக்கை  விடுத்தது.

அத்தடை  அரசாங்கத்தைக்  குறைகூறுவோருக்கு  வாய்ப்பூட்டுப்  போடும்  முயற்சி  என  அது  குறிப்பிட்டது.

“அனைத்துலகச்  சட்டப்படி  ஒருவர்  அவரது  நாட்டின்  எல்லைகளுக்குள்  சுதந்திரமாக  நடமாடுவதற்கும்,  மற்றவர்களுடன்  ஒன்றுகூடவும்,  கருத்துகளைச்  சொல்லவும்  உரிமை கொடுக்கப்பட  வேண்டும்”, என  ஏஐ  இன்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.