டிஏபி குடிமக்கள் பிரகடனத்தைத் தொடர்ந்து ஆதரிக்கும்

puadமுன்னாள்  பிரதமர் டாக்டர்  மகாதிர்  முகம்மட்டுடன்   ஒத்துழைப்பது குறித்து சிறையில் உள்ள முன்னாள்  எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் எச்சரித்திருந்த போதிலும் டிஏபி குடிமக்கள் பிரகடனத்தைத் தொடர்ந்து ஆதரிப்பதுடன் மகாதிருடனும் ஒத்துழைக்கும்.

“ஆமாம். நிபந்தனைகளுடன்  அதைச் செய்வோம்”, என டிஏபி விளாபரப் பிரிவுச் செயலாளர்  டோனி புவா கூறினார்.

மகாதிருடன் ஒத்துழைப்பதில்   உள்ள ஆபத்தை  எடுத்துரைக்கும் அன்வாரின் கடிதம் குறித்து   புவா  கருத்துரைத்தார்.

“அன்வாரின் கவலை நியாயமானதே. நாங்கள்கூட  (மகாதிரால்) பயன்படுத்திக் கொள்ளப்படுகிறமோ என்று அஞ்சியதுண்டு”, என்றாரவர்.

ஆனால், சாதக பாதகங்களை ஆராய்ந்து பார்த்ததில் மகாதிருடன் ஒத்துழைப்பதால் ஆதாயம்தான் என்ற முடிவுக்கு டிஏபி வந்தது.

“முக்கியமான விசயம் மகாதிர் மூலமாக பிஎன் ஆதரவாளர்களைத் தொட முடியும். அவரது செல்வாக்கைக் கொண்டு இன்னும் பெரிய கூட்டத்தைச் சென்றடைய முடியும்.

“அது பிஎன் ஆதரவாளர்களிடம் நம்முடைய நிலையை எடுத்துரைக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் பக்கத்தான் ரக்யாட்டைப் பற்றி மேலும் நன்றாக அறிந்து கொள்வார்கள். நமக்கும் ஆதரவு கூடும்”, என புவா கூறினார்.