ஹாடி: பாஸ் சுங்கை புசார் விவகாரத்தில் சிலாங்கூர் அரசிலிருந்து வெளியேற்றப்படுவதை ஏற்றுகொள்ளத் தயார்

Hadinosplitingof votesசுங்கை புசார் இடைத் தேர்தல் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழுவில் பாஸ்  அதன் பிரதிநிதித்துவத்தை இழக்கத் தயார் என்று அக்கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறுகிறார்.

சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி ஆட்சிகுழுவிலிருந்து பாஸ் பிரதிநிதி அகற்றப்படுவார் என்று மிரட்டல் விடுத்திருந்தது குறித்து கருத்து தெரிவித்த ஹாடி, அக்கட்டத்திற்கு வராது என்று நம்புவதாக கூறினார்.

“நான் வதந்திகளை மட்டும் கேள்விப்பட்டேன். அது உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

“நமது ஆட்சிக்குழு உறுப்பினர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று (அஸ்மின்) விரும்பினால், சரி, ஆட்சிக்குழு நியமனம் மாநில அரசைப் பொறுத்தது, ஆனால், ஒரு தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது கட்சியைப் பொறுத்தது.

“மேலும், ஆட்சிக்குழு நியமனத்திற்கு சுல்தானின் ஒப்புதல் தேவைப்படுகிறது. ஆகவே, நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். அது சுல்தானை பொறுத்தது.

“எதுவானாலும் சரி, அது வெறும் வதந்தி என்று நான் நம்புகிறேன்”, என்று ஹாடியை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.