சுவிட்சர்லாந்தின் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (ஓஏஜி), 1எம்டிபி தொடர்புடைய குற்றச்செயல்கள் நிகழ்வதைத் தடுக்காத BSI SA வங்கிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
“BSI SA வங்கியில் உள்ளுக்குள் சில குறைபாடுகள் இருக்கலாம் என ஓஏஜி சந்தேகிக்கிறது.
“இக்குறைபாடுகளின் காரணமாக இப்போது விசாரிக்கப்பட்டு வரும் 1எம்டிபி தொடர்புடைய குற்றச்செயல்கள் நிகழ்வதை அவ்வங்கியால் தடுக்க முடியாது போயிற்று என நம்பப்படுகிறது”, என அது ஓர் அறிக்கையில் கூறியது.
சுவீஸ் குற்றவியல் சட்டப்படி, ஒரு நிறுவனம் மூன்றாம் தரப்புகள் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், ஊழல்கள் முதலிய குற்றச்செயல்கள் செய்வதைத் தடுக்க நிறுவனப்பூர்வமாக நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகக் கருதப்படுமானால் அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று ஓஏஜி கூறியது.