சிங்கப்பூர் நாணய ஆணையம் 1எம்டிபி-யுடன் தொடர்புள்ள பிஎஸ்ஐ பேங்கை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
அந்த சுவீஸ் வங்கி சிங்கப்பூரில் ஒரு வர்த்தக வங்கியாக செயல்பட கொடுக்கப்பட்ட அனுமதியை சிங்கப்பூர் மத்திய வங்கி மீட்டுக் கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் அறிவித்தது.
வங்கி மூடப்படுவதற்குப் பணச் சலவைக் கட்டுப்பாடு மீறல், வங்கி நடவடிக்கைகளில் மேலாண்மைக் கவனக் குறைவு, வங்கிப் பணியாளர்கள் சிலரது ஒழுங்கற்ற செயல்கள் போன்றவை காரணங்களாகக் கூறப்பட்டன.
1984-க்குக்குப் பீன்னர் சிங்கப்பூரில் ஒரு வங்கியை மூடச் சொல்வது இதுவே முதல் முறையாகும் என்று சிங்கையின் மத்திய வங்கி குறிப்பிட்டது.