இன்று பிகேஆரின் அரசியல் பிரிவு கூடும்போது தலைமைச் செயலாளர் ரபிசி ரம்லியை மாற்றும்படி கோரிக்கை விடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இரண்டு சர்ச்சைக்குரிய விவகாரங்கள்தாம் இதற்குக் காரணங்களாகும். ஒன்று சிறையில் உள்ள முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் கடிதம் அம்பலப்படுத்தப்பட்டது இன்னொன்று ஒரு வாட்ஸெப் உரையாடல்.
வெளியில் கசிந்த அந்த வாட்ஸெப் உரையாடலில் ரபிசி, சிலாங்கூர் அரசில் ஏதாவது காரியம் ஆக வேண்டுமென்றால் ரொக்கப் பணமும் பெண்களும் கேட்கிறார்கள் என்று புகார்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகக் கூறி இருந்தார்.
நேற்று அந்த பாண்டான் எம்பி, தம்மிடமுள்ள ஆதாரங்களை பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலிடம் வழங்கப் போவதாகக் கூறினார்.
இதனிடையே, சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இக்குற்றச்சாட்டுகளை மாநில அரசை மாசுபடுத்தும் முயற்சி என மறுத்திருந்தார்.