அவதூறு வழக்கு தொடர்பில் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்த முறையீட்டு நீதிமன்றம் முன்னாள் எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு இழப்பீட்டுத் தொகையாக ரிம200,000 கொடுக்குமாறும் உத்தரவிட்டது.
உத்துசானின் வழக்குரைஞர் முன்வைத்த வாதங்களை ஏற்பதற்கில்லை என்று நீதிபதி பிரசாத் சந்தோசம் தம் தீர்ப்பில் கூறினார்.
உத்துசான் வழக்குச் செலவாக ரிம5,000 கொடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
நீதிபதி பிரசாத் சந்தோசத்துடன் நீதிபதிகள் சபரியா முகம்மட் யூசுப், அஸ்மாபி முகம்மட் ஆகியோரும் அந்த மேல்முறையீட்டை விசாரித்தனர்.