1எம்டிபி-இன் கணக்குகளிலும் நிர்வாகத்திலும் முறைகேடுகள் நிகழ்ந்ததில்லை என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இன்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
“பிஏசி (பொதுக் கணக்குக்குழு) 1எம்டிபி கணக்குகளிலும் நிர்வாகத்திலும் முறைகேடுகள் நிகழ்ந்ததில்லை என்று கூறியுள்ளது. அதில் சீர்கேடுகளும் இல்லை.
“நிறுவனத்தின் நிர்வாகம் மட்டுமே பலவீனப்பட்டிருந்தது”, என நஜிப் (பொக்கோக் சேனா, எம்பி) மாபுஸ் ஒமாரின் கேள்விக்குப் பதிலளித்தார்.
பிஏசி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் 1எம்டிபி என்ன நடவடிக்கை எடுத்துக்கொண்டது என மாபுஸ் கேட்டிருந்தார்.
“பிஏசி-இன் பரிந்துரைகளை ஆராய்ந்து மேல் விசாரணையும் மேல்நடவடிக்கையும் தேவையா என்பதை போலீஸ் முடிவு செய்யும் போலீஸ் படைத் தலைவர் கூறியுள்ளார்”, என நஜிப் மேலும் கூறினார்.
திருடனே நீதிபதி ஸ்தானத்திற்கு வந்து தீர்ப்பு சொல்வது போல் இருக்கிறது இந்த1MDB கூற்று. !MDB முறைகேடுகளில் நஜிப் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குற்றச்சாட்டு. இப்போது அதே பிரதமர், தனக்கு தானே தீர்ப்பு கூறுகிறார். நல்ல கூத்து. PAC, நாடாளுமன்றத்தில் உள்ள ‘ரப்பர் ஸ்டாம்ப்’. அதில் உள்ளவர்கள் அனைவரும் பிரதமரின் சிபாரிசினால் பேர் போடுபவர்கள்[டாக்டர் டான் செங் கியாவைத் தவிர] DAP யின் டாக்டர் டானும், பினாங்கின் முதல்வர் லிம் குவான் எங்கை காப்பாற்ற வேண்டி, பிரதமரின் தாளத்திற்கு ஆட வேண்டியுள்ளது. ஒரு சில எதிர்க்கட்சி தலைவர்கள், தங்களையும், தாங்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களையும் காப்பாற்றிக்கொள்ள, மக்களை அடகு வைக்க முற்ப்பட்டுவிட்டார்கள். நம் நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும்.
ஹஹஹஹஹ ! இவனெல்லாம் எப்படி வெட்க மில்லாமல் இப்படி பேச முடிகிறது? சூடு சொரணை மானம் ஈனம் ஒன்றும் கிடையாது?