இன்று 1எம்டிபி, விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக பேங்க் நெகாரா விதித்த அபராதத்தை மத்திய வங்கியில் செலுத்தியது.
“1எம்டிபி பேங்க் நெகாராவின் முடிவுக்கிணங்க அதற்கு விதிக்கப்பட்ட அபராதம் முழுவதையும் இன்று செலுத்தியது என்பதை இதன்வழி உறுதிப்படுத்துகிறோம்”, என அந்நிறுவனம் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
ஆனால், அபராதத் தொகை எவ்வளவு என்பதை அது தெரிவிக்கவில்லை.
மத்திய வங்கியும் அத்தொகையை வெளியில் சொல்வது அதன் விதிமுறைகளை முரணானது என்று ஏற்கனவே தெரிவித்திருந்தது.
2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் 1எம்டிபி வெளிநாடுகளுக்குப் பணம் அனுப்ப பேங்க் நெகாரா அனுமதி வழங்கியிருந்தது. பின்னர் அந்த அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. அனுமதி இரத்துச் செய்யப்பட்டதால் 1எம்டிபி வெளிநாட்டில் உள்ள பணத்தை மலேசியாவுக்குத் திரும்பக் கொண்டு வரவேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆனால், 1எம்டிபி அதன்படி நடக்கவில்லை என்பதால் அதற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
எல்லாம் கண்ணாமூச்சி