அன்வார் இப்ராகிம் எழுதிய கடிதமொன்று வெளியானதை அடுத்து அவரது வெளியுலகத் தொடர்புகள் முடக்கிப்போடப்பட்டிருப்பதாக அவரின் மகளும் பிகேஆர் உதவித் தலைவருமான நுரூல் இஸ்ஸா அன்வார் கூறினார்.
கடிதம் கசிந்ததை அடுத்து குடும்பத்தினர்கூட அவரைச் சந்திப்பதற்குச் சிரமப்படுவதாக அவர் சொன்னார்.
“வழக்குரைஞர்களும் அவரைச் சந்திக்க சிரமப்படுகிறார்கள். தந்தைச் சந்தித்து அவரிடம் ஆவணங்களில் கையெழுத்து வாங்கவும் அவரிடம் ஆணைகள், அறிவுறுத்தல்கள் பெறவும் வாரத்துக்கு ஒரு மணி நேரம்தான் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது”, என நூருல் இஸ்ஸா தெரிவித்தார்.
அவர் கடிதம் அனுப்பிய விவகாரம் வெளியில் தெரிந்த பின்னர் சிறைத்துறையும் உள்ளுக்குள் அது பற்றி விசாரணை நடத்தியுள்ளது.
இப்போது அன்வார் சிறையை விட்டு வெளியேறும்போதெல்லாம் உடல் பரிசோதனை செய்யப்படுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரமொன்று கூறியது.
தவறு என்று தெரிந்தும் தவறுசெய்தால் , கண்டிப்பதில் தவறில்லையே ? ஒரு விரல் எதிரியை சுட்டிக்காட்டும் போது மற்ற நான்கு விரல்கள் நம்மை சுட்டிக்காட்டும் என்பதை மறந்துவிடக்கூடாது . எல்லா கைதிகளுக்கும் விதிமுறை ஒன்றுதான் . ஆந்தைகளும் கழுகுகளும் கோட்டான்களும் எல்லா கட்சியிலும் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு !! கடிதத்தை கசியவிட்டது யார் ?? கண்டுபிடியுங்கள் !!
அவன்தான் ராபிசி ராமலி . துரோகி . கூட இருந்தே குழி பரிக்கறான்……