அரசியல் நன்கொடையாகப் பெற்ற ரிம2.6 பில்லியன் பற்றி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை எனச் சுற்றுலா, பண்பாட்டுத் துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து பெருந் தொகை நாட்டுக்குள் வருவதை பேங்க் நெகாராவிடம் மட்டுமே அவர் தெரிவிக்க வேண்டும் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான நஸ்ரி கூறினார்.
“அவர் எங்களிடம்(உச்சமன்றம்) தெரிவிக்கவில்லை. தெரிவிக்க வேண்டியதுமில்லை. பேங்க் நெகாராவின் அனுமதி பெற வேண்டும். அவ்வளவுதான்”, என்றாரவர்.
“(முன்னாள் பிரதமர்) மகாதிர் (முகம்மட்) ஐந்து தேர்தல்களில் எங்களுக்குத் தலைமை ஏற்றார்.
“எவ்வளவு பணம் திரட்டினார் என்பதை எங்களிடம் சொன்னதில்லை. இதெல்லாம் சகஜம்தான், சரியா? அப்போது மகாதிர் செய்தது சரியென்றால் நஜிப் செய்வது மட்டும் ஏன் சரியாகாது?
“நஜிப்பின் வங்கிக் கணக்குக்குப் பணம் போனது. அவர் எவ்வளவு பணம் திரட்டினார் என்பதாவது தெரிகிறது. ஐந்து பொதுத் தேர்தல்களைக் கண்டவர் மகாதிர்….அவர் எவ்வளவு திரட்டினார் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது”, என்றார் நஸ்ரி.
வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நன்கொடையை பற்றி யாருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை என்று அமைச்சர் பிதற்றுகிறார். பின் எதற்காக அந்த பணத்தை திருப்பி அனுப்பி விட்டதாக அல்தாந்துயா நஜிப் கூறினார்.?
இவங்களுக்கு எல்லாம் பெருந்தொகை வந்தால் யாருக்கும் சொல்ல தேவை இல்லையாம் . ஆனா நம்பள மாறி ஆளுக்கு ஒரு $10,000 வந்தால் உடனே கணக்கு காண்பிக்க வேணும் . இன்கம் டெக்ஸ் ஆப்பிசுக்கு தெரிவிக்கானும் போங்கடா ….பசங்களா……..
பிச்சை எடுக்கலாம் தப்பில்லை ஆனால் தனக்கு தேவையான தொகையை செலவு செய்தபின் மீதி தொகையை பிச்சை போட்டவர்களிடமே பிச்சைக்காரர் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்து புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்கலாமே !