பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கிற்கு எதிரான விசாரணையை மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்எசிசி) முடித்துக்கொண்டு விட்டதாகவும் அதன் விசாரணை ஆவணங்களை சட்டத்துறை தலைவரிடம் (ஏஜி) தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும் அந்த அமைப்பு வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறது.
குவான் எங்கிற்கு எதிரான எந்த விசாரணை மீதான அறிக்கை ஏஜியிடம் தாக்கல் செய்யப்பட்டது என்பதை எம்எசிசி திட்டவட்டமாக கூறவில்லை என்றாலும், அது முதலமைச்சரின் ஜாலான் பின்ஹோர்னில் இருக்கும் அவரது வீடு சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும்.
இந்த விசாரணையின் விளைவாக சட்ட நடவடிக்கை எடுப்பதா இல்லையா என்பது ஏஜியைப் பொறுத்தது. தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை மீது ஏஜி திருப்தி அடைந்தால், பொருத்தமான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எம்எசிசியின் அறிக்கை திருப்திகரமானதாக இல்லையென்றால், சட்ட நடவடிக்கைள் ஏதும் எடுக்கப்படாது என்று அந்த ஆணையம் கூறிற்று.
எந்த வழக்கும் இல்லை. அதற்கு கைமாறாக அண்மையில் நடைப்பெற்ற சரவா தேர்தலில் எதிர்கட்சிகளை சின்ன பின்னமாக்க ‘அப்பனையும், மவனையும்’ உள்ளே விட்டு குளறுபடி செய்யப்பட்டு விட்டது. இனி எந்த வழக்கோ விசாரானையோ கிடையாது. இதுதான் மலேசிய அரசியல்.
பெரிய பெரிய கொள்ளைக்காரனை விட்டுடு சின்ன திருடனை போலிஸ் விசாரணை பண்ணுதாம்………….
உலகமே நாடகமேடை அதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் சிறந்த நடிகர்கள் என்று நிருபணமாகிறது