அரசாங்கம் 1எம்டிபி-இலிருந்து யுஎஸ்1.03 பில்லியனைப் பெற்றுக்கொண்ட குட் ஸ்டார் லிமிடெட் நிறுவனம் பெட்ரோசவூதிக்குச் சொந்தமானதுதான் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.
பொதுக் கணக்குக்குழு உறுப்பினர் டோனி புவா, குட் ஸ்டார் நிறுவனம் பெட்ரோசவூதியுடன் தொடர்பில்லாத தனிநபர் ஒருவருக்குச் சொந்தமானது என்பது பேங்க் நெகாரா விசாரணைகளில் தெரிய வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய பின்னரும் அரசாங்கம் அதன் பிடிவாதத்தை விடவில்லை.
“1எம்டிபி நிறுவனத்தின் ஆவணங்களின்படி, பணம் செலுத்தப்பட்டபோது குட் ஸ்டார் நிறுவனம் பெட்ரோசவூதிக்குச் சொந்தமாக இருந்தது.
“பணத்தைப் பெற்றுக்கொண்டதாக பெட்ரோசவூதியும் ஒப்புக்கொண்டிருக்கிறது. பணம் செலுத்தப்பட்டபோது கையொப்பமான உடன்பாடுகள் அதைக் காண்பிக்கின்றன”.
நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து வடிவில் அளித்த பதிலில் இவ்வாறு கூறியது.