அரசாங்கம் தேசிய கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் 1985-இல் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரிம13.9 பில்லியன் மதிப்புள்ள உதவிகளை வழங்கியுள்ளதாக அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் முஸ்தபா முகம்மட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
உதவி என்பதில் அரசாங்க மான்யங்கள், வரி விலக்குகள், நிதி-அல்லாத உதவிகள் ஆகியவை அடங்கும் என தியோ கொக் சியோங்(டிஏபி- ராசா)-கின் கேள்விக்கு மறுமொழி அளித்தபோது அமைச்சர் கூறினார்.
“போட்டிமிக்க தொழிலில் அந்நிறுவனம் போட்டியிடும் வல்லமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக உதவிகள் வழங்கப்பட்டன”, என முஸ்தபா கூறினார்.