பினாங்கு அரசு, 1எம்டிபி ஆயர் ஈத்தாமில் வாங்கிய 234-ஏக்கர் நிலத்தை முடக்கி வைத்துள்ளதாக முதலமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.
1எம்டிபி அந்நிலத்தை ரிம1.38 பில்லியனுக்கு 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாங்கியது.
அந்நிலத்திலிருந்து வெளியேற்றப்படும் மூவாயிரம் குடும்பங்களுக்கு 9,999 வீடுகளை 1எம்டிபி கட்டிக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் மாநில அரசு அந்நிலக் கொள்முதலைத் தடுப்பதாக லிம் தெரிவித்தார்.
“மிகப் பெரிய முதலீடு அத்துடன் நிலம் மொத்தமும் அதற்கு(1எம்டி)ச் சொந்தமானதல்ல என்பதால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா என்ற ஐயம் எழுகிறது”, என லிம் ஊடக அறிக்கையில் கூறினார்.