பிரதமர்துறை அமைச்சர் அஸலினா ஒஸ்மானுக்கு ஒரு புதிய பெயரைக் கொடுக்கலாம் என்கிறார் ஜைட் இப்ராகிம்.
அவரை ‘Ms sub judice’ என்று அழைக்கலாம் என அந்த முன்னாள் சட்ட அமைச்சர் டிவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வங்கிக் கணக்குப் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம் அஸலினா அது பற்றிப் பேசுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகி விடும் என்று கூறுவது வழக்கமாகி விட்டது. அதனால் இப்படி ஒரு பெயரை இட்டிருக்கிறார் ஜைட்.