நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் ஹூடுட் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், மசீச தலைவர் லியோவ் தியோங் லாயும் கெராக்கான் தலைவர் மா சியு கியோங்கும் தங்களுடைய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
பாரிசான் கூட்டணியின் பங்காளிகளைக் கலந்தாலோசிக்காமல் பாஸ் கட்சியின் அப்துல் ஹாடி அவாங் நாடாளுமன்றத்தில் ஹூடுட் சட்ட மசோதாவை தாக்கல் செய்ய அரசாங்கம் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
லியோவ் போகுவரத்து அமைச்சராகவும் மா பிரதமர் துறை அமைச்சராகவும் இருக்கின்றனர்.
“நான் இதை நிறுத்துவதற்கு முயற்சிக்கிறேன். நான் இதர பாரிசான் பங்காளிக் கட்சிகளையும் சேர்த்து இதனை நிறுத்த முயற்சிக்கிறேன்.
“இந்த மசோதாவை நிறுத்துவதற்கு அரசியல் களத்தின் இதர தரப்பையும் ஒன்றிணையுமாறு வலியுறுத்துகிறேன்.
“இதை நாம் செய்ய முடியவில்லை என்றால், நாம் தியாகம் செய்தாக வேண்டும். நான் ராஜினாமா செய்வேன்.
தாம் தொடர்ந்து இருப்பதில் பயன் ஏதுமில்லை என்று கூறிய லியோவ், “நான் இதில் மிக உறுதியாக இருக்க வேண்டும்” என்று கூறியதாக த ஸ்டார் தெரிவிக்கிறது.
கெராக்கான் தலைவர் மா இந்த மசோதாவை நிறுத்துவதற்கு கெராக்கான் அதனால் இயன்ற அனைத்தையும், அரசாங்கப் பதவிகளைத் துறப்பது உட்பட, செய்யும் என்றார்.
“ஜூலை 5, 2014 மற்றும் அக்டோபர் 14, 2015 இல் நடைபெற்ற ஊடக நேர்காணல்களில் நாடாளுமன்றத்தில் இந்த ஹூடுட் மசோதா நிறைவேற்றப்படுமானால், நான் பதவிலியிலிருந்து ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளேன்.
“அந்த முடிவில் மாற்றம் ஏதும் இல்லை”, என்று மா இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
சபாஸ் அப்படி போடு அருவாள…! அந்த சூடு சொரணை இல்லாத ம.இ.கா. காரங்களுக்கு இது எல்லாம் மண்டையில்ல ஏறாது.
மசீசா மற்றும் கெராக்கான் தலைவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். ஆனால் கண்டிப்பாக ம இகா தலைவர்களோ அல்லது பிற இந்தியர் சார்ந்த கட்சிகளோ இதனை செய்ய மாட்டார்கள்.மாறாக தங்களின் பிளவு படாத ஆதரவை பாரிசானுக்கு வழங்குவதில் உறுதியாக இருப்பார்கள்.இதன் விளைவுகளை நம் சமூகம்தான் அனுபவிக்க வேண்டும்.
போடா வெங்காயங்களா– எண்டா நீங்க பெரிய மந்திரி ஆனீங்க? ஒரு மரியாதையும் கிடைக்கவில்லையா? இதெல்லாம் அப்போதே தெரிந்து இருக்க வேண்டும்– என்ன சப்பு சப்பினாலும் ஒன்னும் புடுங்க முடியாது– நாஜீபு அல்தான்தூயா பதவியில் இருக்க எல்லாமே செய்வான்– ஆட்சி போனால் கம்பி எண்ண வேண்டி இருக்கும் அதனால் எல்லா தில்லு முள்ளு செய்தும் ஆட்சியை தன்னுடைய வசம் வைத்திருப்பான்.
மத்த கச்சி என்ன அச்சி
இந்த நாட்டில் மட்டுமல்ல உலகத்தில் எந்த மூலையிலும் சிறிய சமூகத்தினர் பெரிய சமூகத்தினரை ஒன்றும் பண்ண முடியாது என்பதருக்கு மலேசியா ஒரு எடுத்துகாட்டு எப்படியாயினும் இனவெறி பிடித்தவர்கள் தங்கள் இனத்தோடுதான் சேருவார்கள் என்று நிரூபித்துவிட்டீர்களே!ம.இ.கா.எங்கு சென்றீர்கள்!இருக்கீர்களா இல்லையா தேர்தல் சமயத்தில் மட்டும்தான் அனல் பறக்க அறிக்கை விடுவீர்கள் ஊரு மெச்சிக்க பூ…………..மா என்ற கதையா இருக்கு உங்கள் கதை
நமது இந்தியர்களில் காப்பகம் என்று சொல்லப்படும் ம இ கா என்ற கட்சியின் நிலைப்பாடு என்ன ?, தானை தலைவரின் நகல் திரு பாரசூட் மணியத்தின் நிலைப்பாடு என்ன ? நமது கலை,கலைச்சரம் ,வழிபாடு ,கல்வி,வேலைவாய்ப்பு , அரசாங்கத்தில் நமது சதவிதம் குறைப்பு என பல சம்பவங்கள் சமீபமாக நடந்தேறிவரும் இந்த தருனத்தில் மௌன சாமியாக கண்மூடி இருக்கும் இந்த கட்சி தேவைதான என்பதை மனதில் நிலைநிறுத்தி வரும் பொது தேர்தலில் நாம் ஒன்று கூடுவோமகுக .
ஐயா சிவா அவர்களே- மத்த கச்சி என்றால்? MIC PPP எல்லாம் கட்சிகளே இல்லையே! பிறகு? சப்பிகளிடம் என்ன எதிர் பார்க்க முடியும்?
மானங்கெட்ட கட்சியும் கோணல் கேவிஎசும் இப்படி சொல்ல முன்வருவார்களா?
ஹூடுட் மசோதா நிறைவேற்ற // ம இ கா , பி பி பி ,இ பி எப் , மற்றும் இதர ஜால்ரா கட்சிகள் பாடுபடும் ! இதுதானே உங்கள் கடைசி அறிக்கை ?
இப்பதான் திரு பாரசூட் மணியத்திருக்கு பதவி கொடுத்தாங்க . அதுக்குள்ளே பதவிய புடிங்கிகிட்டா எப்படி காசு பார்ப்பது? கொஞ்சம் ஞாயமா பேசுங்க