சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் ஹுடுட் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் தாமும் பதவியிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக மசீசவின் துணைத் தலைவர் வீ கா சியோங் அறிவித்துள்ளார்.
இந்த மசோதாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய கடமையும் செய்தே தீரவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது என்று வீ கூறுகிறார்.
இது வெறும் மிரட்டல் அல்ல. இது மசீச தலைவர்களின் பொறுப்பு வாய்ந்த முடிவு என்று வீ இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.
இவனும் mic MCA காரனை எந்த நல்ல மக்களும் நம்ப மாட்டனுங்க umno இன்று நம்புவனுங்கள் எல்லாம் போறம் போக்குகள் ஆகும்
ம.இ.கா. , ம.சீ. ச. , கெராக்கான் தலைவர்கள் வரும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சி வேட்பாளரை ஆதரிக்காமல் ஒதுங்கி நின்றாலே அம்நோக்காரன் ஆட்டம் கண்டு போவான். ஹுடுத் சட்டம் நிறைவேட்ற பட்டால் வெளி ஏறுவோம் என்பதை விட தேர்தலில் கலந்துக் கொள்ள வில்லை என்றாலே அடங்கி விடுவார்கள்…?