கோயில் சிலையை சேதப்படுத்தியவர் வழக்கு விசாரணைக்கு தகுதியான உடல்நிலையைக் கொண்டிருக்கிறார்

 

fittostandtraialகடந்த மாதம் ஈப்போவில் கோயில் சிலைகளைச் சேதப்படுத்திய ஒரு மருத்துவ பட்டதாரிக்கு எதிராகச் சாட்டப்பட்டுள்ள குற்ற விசாரணைக்கு அவர் தகுதியான உடல்நிலையைக் கொண்டிருப்பதாக இன்று செசன்ஸ் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

தஞ்சோங் ரம்புத்தான், பஹாகியா உலு கிந்தா மருத்துவமனையின் மா 19 ஆம் தேதி இடப்பட்ட மனநோய் மருத்துவ அறிக்கையில் ஃபதி முன்ஸிர் நாட்ஸ்ரி, 29, வழக்கு விசாரணைக்கு தகுதியான உடல் நிலையைக் கொண்டிருப்பதாக கூறப்பட்டது என்று அரசு தரப்பு வழக்குரைஞர் நீதி மன்றத்தில் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள ஃபதி முன்ஸிருக்கு எதிரான குற்றச்சாட்டு இன்று நீதிபதி டி. சுனித்தா கவுர் முன்பு வாசிக்கப்பட்டது. குற்றச்சாட்டை மறுத்த ஃபதி முன்ஸ்ரி விசாரணை கோரினார்.

கடந்த ஏப்ரல் 24 இல், ஈப்போ ஶ்ரீ முனீஸ்வரன் அமன் கோயிலுள்ள சிலைகளை அவர் சேதப்படுத்தியதாகவும், கையில் பாராங் கத்தி வைத்திருந்ததாகவும் கூறப்பட்டது.

சிலைகளைச் சேதப்படுத்தியக் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால், பீனல் சட்டம் செக்சன் 295 இன் கீழ் ஃபதி முன்ஸிருக்கு கூடினபட்சம் ஈராண்டு சிறைத் தண்டணை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

-பெர்னாமா