ஹுடுட் மீது பொதுக் கருத்துக்கணிப்பு நடத்தலாமே- ஜைட்

hududமுன்னாள்  சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம், பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்   நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஹுடுட் சட்டவரைவு பற்றிப் பொதுமக்களின்   கருத்தை அறிய அதைப் பொதுக் கருத்துக்கணிப்புக்கு விடலாம் எனப் பரிந்துரைத்துள்ளார்.

இவ்விவகாரம்   தொடர்பில்   டிவிட்டரில்   நிறைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ள ஜைட்,   பலர்    ஹாடியும்   பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் மலாய்க்காரர்களுக்காகத்தான் பேசுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

“அவர்கள் மலாய்க்காரர்களின்  நலன் கருதிப் பேசவில்லை. தங்கள் அரசியல் நலன் கருதியே பேசுகிறார்கள்.   ஹுடுட்மீது முஸ்லிம்-அல்லாதார் கொண்டுள்ள கருத்து பற்றியே பேசப்படுவது ஏன்? ஒரு முஸ்லிம் அது குறித்து என்ன நினைக்கிறார் என்பதை அறிய வேண்டாமா?

“எனக்கு ஹுடுட் வேண்டாம். என்னைப்போல் நினைக்கும் மற்றவர்களும் இருப்பார்கள்.   பிரதமர் இவ்விவகாரத்தைப் பொதுக் கருத்துக்கணிப்புக்கு விட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறேன்”, என ஜைட் டிவிட்டரில் கூறியிருந்தார்.