பாஸ் தலைவர் அப்துல் ஆவாங் ஹாடி கொண்டு வந்துள்ள தனி உறுப்பினர் சட்டவரைவு நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பதவி விலக வேண்டும் என்கிறார் மசீச சட்டப் பிரிவுத் தலைவர் இங் கியான் நாம்.
அச்சட்டவரைவு தொடர்பில் நஜிப் தம் நிலைப்பாட்டைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். அம்னோ எம்பிகள் அனைவரும் அதை ஆதரிக்கிறார்களா என்பதையும் தெரிவிக்க வேண்டும் . ஏனென்றால் பிஎன்னின் மற்ற பங்காளிக் கட்சிகள் அதைக் கடுமையாக எதிர்க்கின்றன என்றாரவர்.
பிஎன் மாறுபட்ட கருத்துகள் கொண்டு ஒருவரை ஒருவர் எதிர்ப்பதும் எதிரியின் முயற்சிக்குத் தோள் கொடுப்பதுமான ஒரு நிலை உருவாகுமானால் அது பிஎன் பிளவுபட காரணமாகி விடும் என்றவர் எச்சரித்தார். பிஎன் எதிலுமே ஒன்றித்து பாடுபட வேண்டுமென்ற அடிப்படைக் கொள்கையே அங்கு தகர்ந்து போகிறது.
இவ்விவகாரத்தில், பிரதமரான நஜிப் ஐயத்துக்கிடமான போக்கைக் கொண்டிருப்பது நல்லதல்ல என இங் கூறினார்.
கொண்டு வரப்படும் இந்த சட்ட வரைவு சாராம்சத்தில் என்னென்ன விஷயங்கள் உள்ளன என்பதை தெரிந்து, தெளிவு பெற்று, அதன் பிறகே, அதனை ஆதரிப்பதா, இல்லையா என முடிவெடுக்க வேண்டும். நமக்கு வேண்டாதவர் என்பதால், அவர் கொண்டு வரும் நல்ல விஷயங்களை நாம் ஒதுக்கித் தள்ளக் கூடாது. அதேவேளை நாம் ஆதரிப்பவர் கொண்டு வரும் பயனில்லா விஷயங்களை கண் மூடித் தனமாக நாம் ஆதரிக்கவும் கூடாது.
மடியில் கனம் இருந்தால் தானே வழியில் பயம் ???????
இவர் காமடி செய்கிறார்.
ஹுடுட் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு மட்டுமே அது கட்டுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்-அப்படி முஸ்லிம்கள் அதை ஆதரித்தால்–முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அது என்றுமே மூக்கை நீட்டாத வகையிலும் என்றுமே அதை மாற்ற முடியாத சட்டமாகவும் இருக்க வேண்டும்– காரணம் 1957 பின் பல சட்டங்கள் மாற்றப்பட்டு இன்று நாம் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. அத்துடன் இந்த அம்னோ ஈன ஜென்மங்களை என்றுமே நம்பமுடியாது.