‘காலஞ்சென்ற கர்பால் சிங் தேச நிந்தனைக் குற்றம் புரிந்தவரே’

karpalகர்பால் சிங் காலமாகி ஈராண்டுகள் ஆன பின்னர் அவர்மீதான ஒரு வழக்கில் பேராக் அரசமைப்பு   நெருக்கடியின்போது  அவர் தெரிவித்த கருத்துகள்  அரச நிந்தனைக்குரியவைதான்  என்று முறையீட்டு   நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

பக்கத்தான் மந்திரி புசார் முகம்மட் நிஜார் ஜமாலுடினைப் பணிநீக்கம் செய்யும்   காலஞ்சென்ற பேராக் சுல்தானின் முடிவுக்கு எதிராக  நீதிமன்றத்தில்   வழக்கு     தொடுக்கலாம்    என்று  செய்தியாளர் கூட்டமொன்றில்   கூறியதற்காகக்   கர்பால்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

கர்பால் ஆட்சியாளரின்    இறையாண்மையை எதிர்க்கும்   கடுங்குற்றத்தைப்    புரிந்திருக்கிறார் என நீதிபதி    மொக்டாருடின் பாகி     தம் தீர்ப்பில் குறிப்பிட்டார்.     இன்னொரு நீதிபதி கமர்டின் ஹஷிம் அவரது    தீர்ப்புடன் உடன்பட்டார். ஆனால், நீதிபதி தெங்கு மைமூன்    துவான் மாட்     அப்படி   நினைக்கவில்லை.

கர்பால் வழக்கு   மீதான மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டாலும்   நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட ரிம4,000 அபராதத்தை ரிம1,800 ஆகக் குறைத்தது.

அதாவது கர்பால்  உயிருடன்   இருந்தால்,   இந்த அபராதத் தொகையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியையும் ஓய்வூதியத்தையும்   இழக்க வேண்டியிருக்காது.