பெர்மாத்தா நிகழ்வில் பிரதமரின் மாற்றான் பிள்ளை

riza1பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  மாற்றான்  பிள்ளை  ரிஸா  அசீஸ்- அவருடைய  படநிறுவனமான  ரெட்  கிரைனைட்  பிக்சர்ஸ்தான்  ஆஸ்கார்  பரிசுக்குப்  பரிந்துரைக்கப்பட்ட  த வுல்ஃவ்  அஃப்  வால்  ஸ்திரிட்  படத்தைத்  தயாரித்திருந்தது-  இன்று  கோலாலும்பூரில்  புத்ரா உலக  வாணிக  மையத்துக்கு  வந்திருந்தார்.

பெர்மாத்தா  அனைத்துலக  மாநாட்டுக்காக  அவர்  வந்திருந்தார்.  ரிஸாவின்  தாயாரும்  நஜிப்பின்  துணைவியாருமான  ரோஸ்மா  மன்சூர்தான்  பெர்மாத்தாவின்  புரவலர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

ரிஸாவைக்  கண்டதும் அவரிடம்  நிறைய  கேட்பதற்குச்  செய்தியாளர்கள்  தயாரானார்கள்.  ஆனால்,  அவர்களை  நினைத்தது  நடக்கவில்லை.  பிரதமர்  பேசிக்  கொண்டிருந்தபோதே  ரிஸா  கிளம்பிச்  சென்று  விட்டார்.

அனைத்துலக  ஊடகங்கள்,  வால்  ஸ்திரிட்  ஜர்னல்  உள்பட,  ஹாலிவூட்டில்  திடீரென்று  பெரும்  புள்ளியாக  திகழும்  ரிஸாவைப்  பற்றிப்  பக்கம்  பக்கமாக  செய்திகள்  வெளியிட்டு  வருகின்றன.

முன்னாள்  கணக்காளரான  அவர்  கையில்  பெரும்  பணம்  புழங்குவது  எப்படி  என்று  அவை  கேள்வி  எழுப்புகின்றன.

சர்ச்சைக்குள்ளான  1எம்டிபி  நிறுவனத்திலிருந்து  யுஎஸ்155 மில்லியன்  ரெட்  கிரைனைட்  பிக்சர்ஸுக்குச்  சென்றிருப்பதாக இரு  நாட்டு  விசாரணையாளர்கள்    நம்புகிறார்கள்  என  வால் ஸ்திரிட்  ஜர்னல்  கூறிக்கொண்டுள்ளது.
ஆனால்,  ரெட்  கிரைனைட்  பிக்சர்ஸ்  தன்னிடமுள்ள  பணமெல்லாம்  சட்டப்பூர்வமான  வழிகளில்  வந்தது  என்று  வலியுறுத்துகிறது.