ஹுடுட் சட்டவரைவுமீதான சர்ச்சை ஓய்ந்ததும் ஒரு “நல்ல முடிவு” கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறார் பிஎன் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டஹ்லான்.
அச்சட்டவரைவு குறித்து பிஎன் பங்காளிக் கட்சிகள் கவலை கொண்டிருப்பதைத் தாம் புரிந்து கொள்வதாகவும் ஆனால், சட்டவரைவு தாக்கல் செய்யப்படுவது ஒரு தொடக்கம் மட்டுமே என்றார். அதன் முடிவை இனிமேல்தான் பார்க்க வேண்டும்.
இவ்விவகாரத்தில் பிஎன்னுக்குள் மேலும் கலந்துரையாடல் நடக்கும் என்று வீடமைப்பு, ஊராட்சி, நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சருமான ரஹ்மான் டஹ்லான் கூறினார்.
“கவலை வேண்டாம். பிஎன் அக்கூட்டணியில் உள்ள எல்லாருடைய கருத்துகளையும் மதிக்கும். எல்லாரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவு காணப்படும்”, என்றாரவர்.