சுங்கை புசாரில் மும்முனைப் போட்டி என்றால் பிஎன்னுக்குத்தான் சாதகமாக இருக்கும் என்பதை ஒப்பிய சிலாங்கூர் டிஏபி தலைவர் டோனி புவா, பிஎன்னுக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
அது, கடந்த காலத்தில் பிஎன்னின் கோட்டைகளாக திகழ்ந்த புறநகர் பகுதிகளில் அதற்கு ஆதரவு சரிந்து விட்டதைக் காண்பிப்பதாக இருக்கும் என்றாரவர்.
“வெற்றியோ இல்லையோ எங்களுக்குக் கவலை இல்லை. அது ஒரு நாடாளுமன்ற இடம்தான். அதனால் அரசாங்கம் மாறப்போவதில்லை. ஆனால், பிஎன்னுக்கு 50 விழுக்காடு ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என பிஜே உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினருமான புவா கூறினார்.
என்றாலும், பிஎன்னையும் பாஸையும் எதிர்த்து அத்தொகுதியில் வெற்றிபெற அமனாவுக்கு டிஏபி முழு ஆதரவு வழங்கும். வேட்புமனு தாக்கல் செய்யும் நாளிலிருந்து சுங்கை புசாரிலேயே முகாமிடப் போவதாக புவா தெரிவித்தார்.