போலீசார் மகாதீரிடம் 37 நிமிடங்களில் 30 கேள்விகளைக் கேட்டனர்

 

no proமுன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டிடம் போலீசார் மொத்தம் 37 கேள்விகளை 30 நிமிடங்களில் கேட்டனர், ஆனால் அவற்றில் பெரும்பாலனவை குடிமக்கள் பிரகடனம் பற்றியதாகும் என்று அவரின் வழக்குரைஞர் அஹமட் பாஸ்லான் செ காசிம் கூறினார்.

முன்னதாக, பேரரசரும் இதர மாலாய் ஆட்சியாளர்களும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று மகாதீர் விடுத்திருந்த அறிக்கை குறித்து போலீசார் அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்வர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் 80 விழுக்காடு குடிமக்கள் பிரகடனம் சம்பந்தப்பட்டதாகும் என்று அஹ்மட் பாஸ்லான் செய்தியாளர்களிடம் இன்று பின்னேரத்தில் கூறினார்.

பிற்பகல் மணி 3.20 க்கு அவரின் வாக்குமூலம் பதிவு செய்வது தொடங்கியது. நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையில் தொடங்கிய அது 30 நிமிடங்களில் முடிவுற்றது.

பீனல் சட்டம் செக்சன் 500 இன் கீழ் வகைசெய்யப்பட்டுள்ள இந்த வழக்கு அவதூறு சம்பந்தப்பட்டதாகும் என்றார் அஹமட் பாஸ்லான்.

அதன் பின்னர், அவர் வீட்டிற்கு கிளம்பி விட்டார். அங்கிருந்த செய்தியாளர்களிடம் கையசைத்து விட்டு நிற்காமல் சென்று விட்டார்.

மலேசியாகினியிடம் பேசிய ஒரு போலீஸ் வட்டாரம், போலீசாரின் பல கேள்விகளுக்கு பதில் அளிப்பதைத் தவிர்த்து விட்ட மகாதீர், அது சட்டத்தின் கீழ் தமது உரிமை என்று கூறியதாக தெரிவித்தது.

இருப்பினும், போலீசாரின் பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்ததாக அப்போலீஸ் வட்டாரம் மேலும் கூறியது.

கடந்த வாரம், மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்தின் (எம்எசிசி) ஆலோசனை வாரியத் தலைவர் துங்கு அப்துல் அஸிஸ் துங்கு இப்ராகிம் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்திருந்தார்.