அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட, ஹில்லரி கிளிண்டன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஹில்லரி முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமாவார். அமெரிக்காவின் 239-ஆண்டுக்கால வரலாற்றில் ஒரு பெண்மணி அதிபர் பதவிக்கு போட்டியிடுவது இதுவே முதல்முறையாகும்.